SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

2018-03-12@ 12:43:49

காளையார்கோவில்: காளையார்கோவிலில் உள்ள ஸ்ரீபிரசன்ன ஜெய ஆஞ்சநேயர் ஆலயத்தில் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காளையார்கோவில் தெற்குதெருவில் தேரோடும் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரசன்ன ஜெய ஆஞ்சநேயர் கோவில். இங்கு மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு காலையில் விஷ்வக்சேன பூஜை, ஜபாராயணம் ஹோமம், திருமஞ்சனம், நடைபெற்றது.  இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 308 திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, தொடங்கி துர்கா, லெஷ்மி, சரஸ்வதி, அம்பிகைக்கு பூஜை செய்யப்பட்டு 108 நாமாவளி நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீபிரசன்ன ஜெய ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்