SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சுயதொழிலில் ஜொலிப்பீர்கள்!

2018-02-26@ 15:11:15

1. எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், முன்னோர் சாபம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் எப்போதுமே கஷ்டம் என்கிறார்கள். நான் 23 வருடமாக லோடுமேனாக வேலை பார்க்கிறேன். முன்னேற்றம் இல்லை. ஏதேனும், தொழில் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? பரிகாரம் சொல்லுங்கள். குருசாமி, மதுரை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்மல க்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசை துவங்கி உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ராகு  கேதுவிற்கு நடுவினில் இருந்து சுக்கிரன் வெளியே வந்து இருப்பதால் காலசர்ப்ப தோஷம் என்பது இல்லை. அமாவாசை நாளில் பிறந்திருக்கிறீர்கள். முன்னோர் சாபம் என்பது கிடையாது. முன்னோருக்குச் செய்ய வேண்டிய கடன்பாக்கி உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த நிலை எந்த காலத்திலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்யாது. முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய உழைப்பும் இருந்தாலே எதிர்காலம் பிரகாசமாக அமையும்.

அதற்கான காலநேரமும் தற்போது கூடி வந்துள்ளது. நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்ய இயலும். பழைய இரும்பு சாமான் கடை வையுங்கள். துவக்கத்தில் குறைந்த முதலீட்டுடன் ஆரம்பியுங்கள். இத்தனை வருட லோடுமேன் அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும். ஜென்ம லக்னத்தில் சூரியன், சந்திரன், புதன், சனி என்று நான்கு கோள்களின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் முதலாளியாக அமர்வதற்கு தகுதியானவர். கோபம் வரும்போது வார்த்தைகளை மட்டும் கட்டுப்படுத்துங்கள். முருகப் பெருமானை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வணங்கி வாருங்கள். சுயதொழிலில் ஜொலிப்பீர்கள்.

2. முப்பத்தாறு வயதாகும் எனக்கு 7ல் செவ்வாய் உள்ளது. திருமணம் ஆகவில்லை. 7ல் செவ்வாய் இருப்பது போல் எத்தனையோ பெண் ஜாதகங்கள் வந்தும் எதுவும் கூடி வரவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன தடை உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜெகதீஸ்வரன், தாராபுரம்.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது குருதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்கள் திருமணம் தடைபடவில்லை. செவ்வாயுடன் இணைந்திருக்கும் சனியின் காரணமாக திருமணம் தாமதமாகிறது. கோடீஸ்வரர் ஆகிய நீங்கள் உங்களைப்போல் வசதி வாய்ப்பு நிறைந்த குடும்பத்தில் பெண் எடுக்க இயலாது. ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் அந்தஸ்தில் குறைந்த வீட்டிலிருந்தே பெண் எடுக்க இயலும். உங்களிடம் வேலை செய்பவர் வீட்டுப் பெண்ணாகவும் இருக்கக் கூடும். ஒரு வகையில் உங்கள் தாயார் வழி சொந்தமாகவும் இருக்கலாம். காசு பணத்தில் குறைவு இருந்தாலும் கௌரவத்தில் குறைவு இருக்காது.

அந்தஸ்தை முக்கியமாகக் கருதாமல் குணத்தினை மட்டும் கருத்தில் கொண்டு பெண் தேடுங்கள். செவ்வாயோடு சனி இணைந்திருப்பதால் செவ்வாய் தோஷம் என்பது உங்களுக்குக் கிடையாது. ஏழில் செவ்வாய் இருக்கும் பெண்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. செவ்வாய் தோஷமுள்ள பெண்ணாகத்தான் பார்க்க வேண்டும் என்பது தவறு. திருமணம் நிச்சயமானதும் பழனிக்குச் சென்று பழனிமலையானை தரிசியுங்கள். உங்களிடம் வேலை செய்யும் பணியாள் வீட்டில் நடை
பெறும் திருமணத்திற்கு உங்கள் செலவில் திருமாங்கல்யம் வாங்கித் தாருங்கள். அவர்களது வாழ்த்து உங்களையும் வாழ வைக்கும்.

3. என் மகள் கடந்த அக்டோபரில் வீட்டிற்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டாள். திருமணமாகி ஐந்து நாட்களுக்குப் பின்னர் விவரம் தெரிந்து மாப்பிள்ளையின் பெற்றோர் இரண்டு வருடம் அவகாசம் கேட்டு பையனை அழைத்துச் சென்று விட்டனர். தற்பொழுது அவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என் மகளின் எதிர்காலம் எப்படி அமையும்? உரிய பரிகாரம் சொல்லுங்கள். வேல்விழி.

சித்திரை நட்சத்திரம், துலாம்  ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருப்பது சற்று பலவீனமான நிலையாக உள்ளது. அதே நேரத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் 10ம் இடம் வலிமையாக உள்ளது. நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்ட உங்கள் மகளை தனக்கென்று சுயமாக ஒரு வேலை தேடிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

அவர் முயற்சித்தால் அவருக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும் வாய்ப்பும் பிரகாசமாய் உள்ளது. முதலில் சொந்தக் காலில் நிற்கச் சொல்லுங்கள். அவரது உத்யோகம் மட்டுமே அவரை நல்லபடியாக வாழ வைக்கும் என்பதை எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். தற்போது நடக்கும் நேரம் திருமண வாழ்விற்கு துணைபுரியவில்லை. பெற்றோராகிய நீங்கள் அவருடைய மறுமணத்திற்கு அவசரப்படாதீர்கள். 25வது வயதில் அவரது மண வாழ்வு மலரும். அதுவரை பொறுத்திருங்கள். ஞாயிறு தோறும் அருகில் உள்ள தேவாலயத்தில் தவறாது பிரார்த்தனை செய்து வாருங்கள். மணந்தவனே திரும்ப வருவான்.

4. குறை மாதத்தில் பிறந்த என் மகன் 12 வயது ஆகியும் இன்னும் சரியாக நடக்கவில்லை. எவ்வளவோ சிகிச்சை செய்தும் பலனில்லை. மூளை வளர்ச்சி சரியில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். என் கணவரின் தொழில் நஷ்டம் அடைந்ததற்கும் இவன் பிறந்த நேரம்தான் காரணம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நல்லதொரு பரிகாரம் கூறுங்கள். கவிதா, வேலூர்.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடக்கிறது. அவர் பிறந்த நேரத்தினால்தான் உங்கள் கணவரின் தொழில் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வது முற்றிலும் தவறு. உங்கள் மகனின் ஜாதகத்தில் எந்த விதமான தோஷமும் தென்படவில்லை. அவர் ஏழு மாதத்தில் பிறந்தது மட்டும்தான் குறையாக இருக்கிறது. மற்றபடி அவரது ஜாதகரீதியான கிரஹநிலையும், தற்போதைய தசாபுக்தியும் நன்றாகவே உள்ளது. முன்னோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உங்கள் வீட்டில் சரிவர செய்து வருகிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கு உண்டாகியுள்ள இந்தப் பிரச்னை கிரக நிலையால் வந்தது அல்ல. முன்னோருக்கான கடன் பாக்கி இருந்தால் மட்டுமே இதுபோன்ற பாதிப்பு வந்து சேரும். உங்கள் கணவரின் தொழில்நிலை 04.05.2018 முதல் முன்னேற்றம் காணும். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ராகு கால வேளையில் துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். விடிவுகாலம் பிறக்கும்.

“உமாதேவீசிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷூஷீ கேசரீ பாது கர்ணௌ சத்வரவாஸிநீ
ஸூகந்தா நாஸிகே பாது வதநம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகா தேவீ க்ரீவாம் ஸௌபத்ரிகா ததா.”

5. என் மகன் குவைத் சென்று ஒன்றரை வருடம் ஆகிறது. உடன் வேலை பார்ப்போர் சரியாக பேசுவதில்லை. ஒரேஅறையில் தங்கிக் கொண்டு உடனிருப்பவர் பேசாமல் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். என் மகன் நிம்மதியாக இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கண்ணன், நாகப்பட்டிணம்.

உத்திராடம் நட்சத்திரம் (பூராடம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி குரு 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்திலும், 10ம் பாவகஅதிபதி புதன் நான்காம் இடமாகிய மீனத்திலும் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்து அவருடைய உத்யோகத்தில் முன்னேற்றத்தைத் தருகிறார்கள். ஜென்ம லக்னத்தில் சந்திரனைக் கொண்டிருக்கும் உங்கள் மகன் சென்ட்டிமென்ட் உணர்வு அதிகம் கொண்டவர். இவருடைய மனநிலையைப் பொறுத்தவரை வெளிநாட்டு உத்யோகத்தை விடஉள்நாட்டு உத்யோகமே பயன் தரும்.

வேறுவழியின்றி நீங்கள் அவரை அந்நிய தேசத்திற்கு அனுப்பியிருந்தாலும், வருகின்ற 28.10.2018ற்குப் பின் உள்நாட்டிலேயே நிரந்தர உத்யோகம் பார்ப்பதற்கான வாய்ப்பு வந்து சேரும். கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் பணி செய்வதே அவருடைய மனநிலைக்கு நல்லது. ஜென்மச் சனியின் தாக்கமும் இணைந்திருப்பதால் அவருடைய மனநிலையில் கவனம் கொள்வது அவசியம். சூரியன், சுக்கிரன், ராகு ஆகிய கிரஹங்கள் உச்சபலத்துடனும், சனி ஆட்சி பலத்துடனும் அவருடைய ஜாதகத்தில் அமர்ந்திருப்பது வளமான எதிர்காலத்தைத் தரும். தினமும் காலையில் கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வணங்கி வரச் சொல்லுங்கள். மனஉளைச்சல் குறைந்து தன்னம்பிக்கை கூடும்.

“மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம்சிரஸா நமாமி.”

6. இருபத்தைந்து வயதாகும் என் மகளுக்கு மூன்று ஆண்டுகளாக வரன் தேடியும் திருமணம் கூடி வரவில்லை. முடிவாகும் நேரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நின்றுவிடுகிறது. அவள் மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறாள். திருமணத் தடைநீங்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். ராஜாமணி, சேலம்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குருபகவான் 12ல் அமர்ந்திருப்பதால் இவரது திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் மகள் பிறந்த இடத்தில் இருந்து வடக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். தொலைதூரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். உங்கள் பகுதியில் இருப்பவராகத் தேடாமல் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் மாப்பிள்ளை தேடுங்கள்.

வெளிநாட்டில் பணி செய்பவராகவும் இருக்கலாம். தற்போது குருபலம் இருப்பதால் இந்த வருட இறுதிக்குள் திருமணம் நடந்துவிடும். வியாழன் தோறும் அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 16வது வாரம் முடியும்போது திருமணமும் முடிவாகிவிடும். அவர் மனதிற்குப் பிடித்தமானவகையில் மணாளன் அமைவார்.

“ஸ்ரீவல்லீரமணாயாதஸ்ரீகுமாராயமங்களம்
ஸ்ரீதேவஸேநாகாந்தாயஸ்ரீவிசாகாயமங்களம்
மங்களம் புண்யரூபாய புண்யச்லோகாய மங்களம்
மங்களம் புண்யயசஸேமங்களம் புண்ய தேஜஸே.”

7. என் மகள் பிறந்தது, ருதுவானது இரண்டும் செவ்வாய் கிழமை என்பதால் ஏதாவது தோஷம் உள்ளதா? திருமணத் தடை ஏதாவது ஏற்படுமா?நான் மனதில் நினைக்கும் பையனை என் மகள்மணப்பாளா? அவள் சந்தோஷமாக இருப்பதற்கு பரிகாரம் கூறுங்கள். ராணி.


செவ்வாய்க் கிழமையில் பெண் குழந்தை பிறப்பதால் எந்தவிதமான தோஷமும் இல்லை. மங்களவாரம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிழமையில் ருதுவானதால் அவருக்கு செவ்வாய் தோஷம் உண்டாகாது. இந்தக் காரணத்திற்காக அவருடைய திருமணமும் தடைபடாது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகக் கணக்கின்படி தற்போது சனிதசையில் சனி புக்தி நடக்கிறது. 18 வயது நடக்கும்போதே அவருடைய திருமணத்தைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டீர்கள். குழந்தையின் எதிரில் திருமணப் பேச்சினை எடுக்காதீர்கள்.

படிப்பினில் கவனம் செலுத்த அறிவுறுத்துங்கள். அவருடைய ஜீவன ஸ்தானம் நன்றாக உள்ளதால் அவர் முதலில் ஒரு வேலையில் அமர்வது நல்லது. நீங்கள் மனதில் நினைக்கும் பையனை அவர் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய கிரகச் சூழலின்படி திருமணப் பேச்சினைத் தவிர்ப்பதே நல்லது. 25வது வயதில் அவருக்கு திருமணம் கூடிவரும். அவர் மனதிற்கு பிடித்தமான வகையில் நல்ல கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த மனிதர் கணவராக அமைவார். திருமணத்திற்காக பரிகாரம் ஏதும் அவசியமில்லை. சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மனக்குழப்பம் தீரும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்