SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா

2018-02-23@ 07:06:47

திண்டுக்கல்லின் அரணாக, காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மன் விளங்குகிறாள். மலைக்கோட்டை அருகில் எழுந்துள்ளதால் கோட்டை என்ற அடைப்பெயர் இணைந்து கொண்டது. ஆங்கிலேயர் காலத்தில் மலைக்கோட்டை திப்புசுல்தான் வசம் இருந்தது. அப்போது அடிவாரத்தில் சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தன விக்ரகம் மட்டுமே இருந்தது. பின்பு கோட்டையில் உள்ள ராணுவத்தினர் பீடத்தை சற்று மேம்படுத்திக் கட்டினர். நகர வளர்ச்சி குறைந்திருந்த அக்காலத்தில் வழிபோக்கர்களும், வியாபாரிகளும் அதிகளவில் வழிபட்டு வந்துள்ளனர்.பின்பு படிப்படியாக வளர்ச்சி பெற்றது. வேண்டுவோர்க்கு வேண்டியவற்றைத்தரும் சக்தி இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மாரியம்மன் மங்காத இடம்பெறத் துவங்கினாள்.

நோய்நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடிக்கம்பத்தில் இடும் வழக்கம் ஏற்பட்டது. இன்றளவும் இது ஒரு வழிபாடாகவே இருந்து வருகிறது. அதேபோல் கொடியேற்றிய நாட்களில் கொடிக்கம்பத்திற்கு புனிதநீர் அபிஷேகமும் செய்கின்றனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடங்களுடன் அணிவகுத்து அம்மனை குளிர்வித்து மகிழ்கின்றனர். நீர் அபிஷேகம் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதேபோல் தீ்ச்சட்டி ஏந்தி வருவது, குழந்தைப்பேறு கிடைத்ததும் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருவது, மாவிளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் விழாக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைவிடம்: கோட்டை முன்பாக கிழக்கு நோக்கி இத்திருத்தலம் அமைந்துள்ளது. சன்னதியின் நுழைவாயில் முன்பு தாமிரத்திலான கொடிக்கம்பம் உள்ளது. சன்னதியில் விநாயகர், மதுரைவீரன், நவக்கிரகங்கள், முனீஸ்வரசுவாமி, கருப்பணசாமி, காளியம்மன் மற்றும்  துர்க்கையம்மனும் அருள்பாலித்து வருகின்றனர். மூலவராக விளங்கும் மாரியம்மன் சாந்தமுகத்தோடு பக்தர்களின் உள்ளம் கவர்ந்து வருகிறார். 8 கைகளுடன் காட்சிதரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம் ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு ஆகியவையும் உள்ளன. மார்கழி முதல் நாள் நடைபெறும் விளக்குபூஜை மிகவும் பிரபலம். நூற்றுக்கணக்கான விளக்குகள் நெடுகிலும் வைக்கப்பட்டு நடைபெறும் வழிபாட்டைப் பார்க்க கண்கோடி வேண்டும். இத்துடன் மார்கழி வழிபாடு, பங்குனித்திருவிழா என்று ஆண்டின் பல மாதங்கள் விழாக்கோலம் கொண்டிருக்கும். இருப்பினும் மாசித்திருவிழா இதன் உச்சமாக இருக்கிறது.

மாசி அமாவா சை முடிந்த பிறகு கொடியேற்றப்பட்டு தொடர்ந்து 20 நாட்கள் இத்திருவிழா களைகட்டும். இந்நாட்களில் மாவட்ட மக்கள் தங்கள் வீட்டு விசேஷமம்போல திளைத்து மகிழ்வர். நேர்த்திக்கடன், வழிபாடு என்று ஒருபக்கம் களைகட்டினாலும் பொழுதுபோக்கிற்காக ராட்டினம், கடைகள், சர்க்கஸ், சாகசநிகழ்ச்சி, குழந்தை, பெண்களைக் கவரும் பொருள் விற்பனை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி என்று ஆரவாரமாக இருக்கும்.முக்கிய நிகழ்வான பூச்சொரியல் இங்கு மிகவும் பிரபலம். அம்மன் தன்வீட்டை விட்டு நகர மக்களைக் காண பல்வேறு வீதிகளிலும் வலம் வருவர். அப்போது மலர்களால் அம்மனுக்கு பலரும் அபிஷேகம் செய்வர்.

இதற்காக வழிநெடுகிலும் பூக்கூடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றிருப்பர். பூக்களை வாங்கி வைப்பதற்காகவே இரண்டு, மூன்று டிராக்டர்கள் பின்னால் செல்லும். அந்தளவிற்கு பூக்களால் அம்மனை மக்கள் திணறடித்துவிடுவர். கோயில்திருவிழா நகர்முழுவதும் எதிரொலிக்கும் வைபவமாகவே இந்நிகழ்வு இருந்து வருகிறது.கோயில் நிகழ்ச்சி 20 நாள்தான். ஆனால் ஒரு மாதம் வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டும்.விழாக்காலங்களில் சிம்மம், ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் வருவார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்