SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாந்தோணிமலை கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

2018-02-22@ 12:38:38

கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோயிலில் மாசி திருவிழாவையொட்டிநேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தாந்தோணிமலை கலயாணவெங்கடரமணசாமி கோயில் மாசிமக தேர், தெப்பத்திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. வெள்ளிகருடவாகனம், உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை மாசிதிருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.  மார்ச் 10ம்தேதி வரை   தினமும் காலை பல்லக்கு உற்சவம், இரவு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வரும் 27ம்தேதி காலை பல்லக்கு, மாலை 4.30மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 1ம்தேதி (வியாழன்) மாசி தேர்விழா நடைபெறுகிறது. காலை 9மணிக்கு வடம் பிடித்தலும், தெப்பத்திருவிழா 3ம்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 18 நாட்கள் இத் திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை  அறநிலையத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்