SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்குச் சான்று பகருங்கள்!

2018-02-21@ 13:04:36

திருக்குர்ஆனில் ஓர் அழகான வசனம் உள்ளது. “ நாம் உங்களை உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக.”(குர்ஆன் 2:143) மக்களுக்குச் சான்று வழங்குங்கள் என்பதன் பொருள் என்ன? இஸ்லாம் என்பது மனித குலத்துக்கு இறைவன் அருளிய இறுதியான, முழுமையான வாழ்வியல் நெறி. இந்த வாழ்வியல் நெறியை மக்களுக்கு மிகச் சரியாக, நிறைவாக வாழ்ந்து காட்டியவர் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். சமையலறை முதல் சட்டமன்றம் வரை, படுக்கையறை முதல் பாராளுமன்றம் வரை வாழ்வின் அனைத்துத் துறைகளும் எப்படி அமைய வேண்டும் என்று குர்ஆன் வழிகாட்டியுள்ளது. நபிகளார் (ஸல்) வாழ்ந்து காட்டியுள்ளார்.

இஸ்லாமிய வாழ்வியலுக்கு நபிகளார்தாம் ஒரு சான்று. நபி(ஸல்) அவர்கள்தாம் இறுதித்தூதர். இனி இறைத்தூதர்கள் யாரும் வரமாட்டார்கள். நபிகளார் வாழ்ந்து காட்டிய நடைமுறையை இன்றைய மக்களுக்கு வாழ்ந்து காட்ட வேண்டிய கடமை முஸ்லிம்களைச் சார்ந்தது. இன்று இஸ்லாமிய வாழ்வியலுக்கு நம்முடைய செயல்முறைதான் சான்று. இந்தச் சான்றை நாம் சரியாக வழங்குகிறோமா? அதாவது இறைமார்க்கத்தை சரியான முறையில் இதர மக்களுக்கு சொல்லால் எடுத்துச் சொல்கிறோமா? செயலால் வாழ்ந்து காட்டுகிறோமா? இல்லை என்பதுதான் விடை. அதை முறையாகச் செய்யுங்கள் என்று முஸ்லிம் சமூகத்திற்கு அழுத்தமாக இந்த வசனம் நினைவூட்டுகிறது. சரி, நாம் இன்று எப்படிச் சான்று வழங்கிக் கொண்டிருக்கிறோம்? “உலகில் நீதியை நிலைநாட்டுங்கள்” என்கிறான் இறைவன். (குர்ஆன் 4:135) நாம் உலகில் நீதியையா நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம்? இல்லை. விளைவு, இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள், பகை, வெறுப்பு, துவேஷம்...

“கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்குங்கள்” என்பது இறைத்தூதரின் கட்டளை. நமக்கு வாசிப்பு என்றாலே வேப்பங்காய். அறிவில்லாமல் உலகிற்கு வழிகாட்ட முடியுமா? அடுத்து, “நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்” என்கிறான் இறைவன். இப்படி ஒரு குழு நம்மிடையே இருக்கிறதா? இறைத்தூதரின் வழிமுறையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்; அவர் காட்டிய வழியில் வாழ்ந்து இன்றைய மக்களுக்கு சத்திய வாழ்வுக்கு சான்று பகருங்கள் என்று குர்ஆன் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

இந்த வார சிந்தனை


(நபியே) நீர் கூறுவீராக: “நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாய் இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்.  இறைவன் உங்களை நேசிப்பான்.  உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான்.” (குர்ஆன் 3:31)

சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்