SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வம்பாகீரப்பாளையம் அம்மன் கோயிலில் மயான கொள்ளை

2018-02-21@ 13:02:11

புதுச்சேரி: புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி துலுக்கானத்தம்மன் வழி மாரியம்மன் வேதவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவ 22ம் ஆண்டு மயான கொள்ளை கடந்த 14ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலையில் மகா அபிஷேகம், மாலையில் அம்பாள் வீதியுலா நடந்தது. நேற்று மாலை சிம்ம வாகனத்தில் அம்பாள் வீற்றிருந்து, வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் வல்லால மகாராஜா கதை வர்ணித்து மயான கொள்ளை நடைபெற்றது. வீதிவலம் வந்த பிறகு, பால் அபிஷேகம் நடந்தது. மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று இரவு புதிய துறைமுகத்தில் அங்காளம்மனுக்கு தெப்ப உற்சவமும், நாளை (22ம் தேதி) துவஜா அவரோஹண விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்