SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழ்வேளூர் அருகே தேவபுரீஸ்வரர் கோயிலில் மகாலட்சுமி குபேர மகா யாகம்

2018-02-20@ 14:08:13

கீழ்வேளூர்: நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த தேவூர் தோன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில் மகாலெட்சுமி குபேர மஹா யாகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த குபேர யாகத்தில் கலந்துகொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கும், குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் நடைபெறும் குபேர யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

16வது ஆண்டாக நேற்று முன்தினம் குபேர மகா யாகம் காலை 8 மணிக்கு பல்வேறு பூஜைகளுடன் குபேர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகாலெட்சுமி குபேர யாகம் நடந்தது. யாகத்தில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று மாகா லெட்மிக்கு மகா அபிஷேகம் செய்யப் பட்டு மகா லெட்சுமிக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், தேவபுரீஸ்வரர் சுவாமி கைங்கர்ய சபா, விழா குழுவினர் உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்