SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம்

2018-02-19@ 13:01:19

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது. தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதியும், ஆரோக்கியத்திற்காகவும் ஊத்தங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம் நடந்து. மகாகணபதி, ஆஞ்சநேயர் மற்றும் சர்ப்பங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மணி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர், மகா கணபதி, ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு வழிபாடுகளும் நடைபெற்றது.

செலந்தம்பள்ளி சரவணன் குழுவினரின் மங்கள இசையை அடுத்து மகாகணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், மிருத்ஞ்சய ஹோமம், ஹயக்ரீவர் ஹோமமும் பூர்ணாஹூகுதியும் நடைபெற்றது. நீதிபதி ராதாகிருஷ்ணன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் உதயசங்கர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் பல்சுவை கோபாலன், ரமேஷ்பாபு, ஜோதிகந்தசாமி, மகேஸ்வரி குணசேகரன், பகவதி, சிவா, ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சர்வசாதகம் கங்காதரன் சர்மா, மணி அய்யங்கார், சுப்பு அய்யர் குழுவினர் யாக வேள்விகளை செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்