SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரத்தியங்கிராதேவி கோயிலில் நிகும்பலா சிறப்பு மகா யாகம்

2018-02-17@ 13:10:14

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூரில் உள்ள பிரத்தியங்கிராதேவி கோயிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா மகா யாகம் நடந்தது. திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூரில் சிதம்பரேஷ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நடைபெறும் யாகத்தில் பக்தர்கள் கொண்டு வந்த மிளகாயை யாகத்தில் போடும்போது எந்தவித காரம், நெடி வெளிப்படாதது தனி சிறப்பு. அமாவாசை தினத்தன்று நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்து வழிபட்டால் சத்ரு தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள், கிரஹ தோஷங்கள் விலகும்.

பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் யாகத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமண தடை, குழந்தையின்மை நீங்கி செல்வம் செல்வாக்கு உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்நிலையில் அமாவாசையையொட்டி நேற்று நிகும்பலா மகா யாகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்