SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை உற்சவம்

2018-02-17@ 13:09:47

செம்பனார்கோவில்: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்த திருச்சம்பள்ளி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை உற்சவத்தின்போது பக்தர்களால் வழங்கப்படும் வேக வைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 13ம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை உற்சவத்தையொட்டி  மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது மயானத்தில் வாழை இலையில் வேக வைத்து கொட்டப்பட்டிருந்த தானியங்களை பக்தர்கள் வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகம் நடைபெற்றன.  இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்