SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசி கரக விழா

2018-02-16@ 14:43:59

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசி கரக திருவிழா நடந்தது. இதில் ஏரளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிகரை அருகே பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாசி மாதத்தையொட்டி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின்னர், மாலையில் கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே உலா வந்தது. இதில் ஆம்பூர், பெரியாங்குப்பம், சாணாங்குப்பம், நாச்சார்குப்பம், ஆலாங்குப்பம் உட்பட பல்வேறு கிராமத்தினர் கரகத்தின் மீது உப்பு, பொரி உருண்டை, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்