SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

2018-02-16@ 14:43:00

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று, அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் அதிகளவு கலந்து கொண்டு வழிபட்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்.  அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர். இதில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இருந்து மாசி மாத அமாவாசை துவங்கியதையடுத்து, மாசணியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு முதல், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.

நேற்று அதிகாலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் உள்புறம் மற்றும் வெளிபுறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். இங்கு வந்த பக்தர்கள் பலர், அம்மனுக்கு பட்டுப்புடவை சாத்தியும், தங்கமலர் அர்ச்சணை செய்தும் வழிபட்டனர். அமாவாசையை யொட்டி பக்தர்கள் வசதிக்காக, நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அதுபோல், கடைவீதி மாரியம்மன் கோயில், பிளேக்மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன்கோயில், ஊத்துக்காடுரோடு பத்ரகாளியம்மன்கோயில் மற்றும் நகர், கிராமங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும், நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்