SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதிபரந்தாடி கோயிலில் படுகளம் எழுப்பும் விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

2018-02-16@ 14:38:33

தோகைமலை: தோகைமலை அருகேயுள்ள ஆதிபரந்தாடி பெரியகாண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயிலில் படுகளம் போட்டு எழுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சி ஆதி பரந்தாடியில் பெரியகாண்டியம்மன் மற்றும் கன்னிமார்அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பெரியகாண்டியம்மன், கன்னிமார்அம்மன், மந்திரமகாமுனி, வீரமகாமுனி, செல்லாண்டியம்மன், பேச்சாயி, பொன்னர் சங்கர், தங்காள், மாயவர், வீரபாகுசாம்புகன், சடைமுனி, சின்னமுனி, ஆதிபட்டகாரர்கள், காரமரம் குடியிருந்த வாக்கு ஸ்தானபதி, சந்தன கருப்பண்ணசுவாமி, கல்காளை வாகனம் ஆகிய தெய்வங்களுக்கு 4 கால பூஜை, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

முக்கிய அம்சமாக அண்ணன்மார், பொன்னர்சங்கர், மாயவர், தங்காள், வீரபாகுசாம்புகன் ஆகிய தெய்வங்களுக்கு படுகளம் போட்டு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுசாம்புகன் படுகளத்திற்கு கோடி போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மந்திரமகாமுனி மற்றும் வீரமகாமுனிக்கு நேர்த்திகடன் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் பரம்பரை அறங்காவலர்கள், விழா குழுவினர் மற்றும் நாகனூர், பாதிரிபட்டி, கழுகூர், சிவாயம், கூடலூர், தோகைமலை, ஈரோடு, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்