SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாசித்திருவிழா கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி : ஏராளமானோர் பங்கேற்பு

2018-02-15@ 13:59:44

பழநி: பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் 39 உபகோயில்கள் உள்ளன. இதில் பழநி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவிற்கு பழநி நகர் பகுதியிலிருந்து மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். இத்திருவிழா கடந்த 9ம் தேதி சிம்ம லக்னத்தில் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பம் சாட்டப்பட்டது. கம்பம் கோயிலின் உட்பிரகாரத்தில் சுற்றி வரப்பட்டது. கம்பம் சாட்டுவதையொட்டி அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கம்பத்திற்கு பெண்கள் தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வந்த அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி கோடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 27ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி 28ம் தேதி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா தலைமையிலான திருக்கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்