SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காரைக்கால் அம்மையர் குளக்கரையில் சிவலிங்கத்திற்கு சகஸ்ரநாம அரச்சனை

2018-02-14@ 16:31:48

காரைக்கால்: மஹா சிவராத்திரியையொட்டி காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவரிங்கத்திற்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில் 5000 பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏகாதசி மற்றும் மஹா சிவராத்தியன்றுதான் புவி ஈர்ப்பு விசையானது மற்ற நாட்களைவிட மிக குறைவாக இருக்குமாம். அந்த நாளில் முழுமையான விரதம் மேற்கொண்டு சைகதலிங்கம் (களி மண்ணால் செய்யப்பட்ட லிங்கம்) கொண்டு, சிவபெருமானை ஓம் நமச்சிவாய என அழைத்து கூட்டு வழிபாடு நடத்தினால், நமது அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்வோம் என்றும், இன்றைய நாளில் ஒருமுறை ஓம் நமச்சிவாய மந்திரம் சொன்னால் அது பல ஆயிரம் முறை சொல்வதற்கு சமம் என புராதன நூல்கள் தெரிவித்துள்ளதாக ஸமிதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று மாலை, காரைக்கால் அம்மையர் குளக்கரையில், சுமார் 5000 பேர் சிவலிங்கத்துடன் அமர்ந்து சகஸ்ரநாம அரச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும், ஸமிதி சார்பில், சைகதலிங்கம் மற்றும் பூஜைபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்