SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவக்காலம்!

2018-02-14@ 09:34:54

சாம்பல் புதன் 14.2.2018

தவக்காலம் ஓர் அருளின் காலம்; மனமாற்றத்தின் காலம்; தவக்காலம் ஆரம்பம் என்றவுடன் திருநீற்றுப் புதன் அன்று நம் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் பதிக்கப்படும் சாம்பல், தடம் பெயர்ந்த நம் வாழ்வை நேரிய தடத்தில் பதிக்க ஓர் அழைப்பு. இயேசுவின் காலடிச் சுவட்டையும், கல்வாரி முகட்டையும் கண்முன் நிறுத்தும் காலம். எல்லோர் முகத்திலும் ஒரு பெரிய சோகம் தேடி வந்து குடியேறும். பெரியவர்கள் முகத்தில் தாடி. ஊர் ஊராகத் தவக்காலத்திருப் பயணங்கள் சிலுவைப் பாதை வழிபாடுகள். தவம் என்பது காவி உடை தரிப்பதும், எதையோ பறிகொடுத்ததுபோல கவலை கொள்வதாய் காட்டுவதும் அன்று. மாறாக, இதயத்து நினைவுகளில் தூய்மையை வளப்படுத்துவது, இல்லார்க்கும், இயலார்க்கும் இரங்குவது, ஆசை வலைகளினின்று அகன்று, வேடமில்லாத, கபடமில்லாத, பேதமில்லாத வாழ்வு வாழ்வது இவற்றை விடுத்து, பகட்டிலும், ஆடம்பரத்திலும், சமூகக் கௌரவம் இருப்பதாக ஓர் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம்.

ஆடம்பரம் அகற்றி, அளவோடு அனுபவித்து, எளிமையைக் கடைபிடித்து ஏழைகளுக்கு உதவி புரிந்து, அவர்களின் துயர் துடைத்து நிற்பதே உண்மையான தவம் என்று உணரத் தவறியதால் இன்று உலகம் பதட்டத்திலும், பயத்திலும், பட்டினியிலும் பயணிக்கிறது. ஈதல், இறை வேண்டல், நோன்பிருத்தல் ஆகிய செயல்களை ஓர் புதிய கோணத்தில் கொண்டு செல்ல அழைக்கும் இயேசுவின் பார்வையை நமதாக்குவோம். பக்தி செயல்கள் தம்பட்டம் அடிப்பதற்காக அல்ல. நமக்குள் நம்மைத் தேடி ‘நான்’ என்ற மனநிலையை விட்டு, ‘நாம்’ என்ற பொதுநிலைக்கு நம் ஒவ்வொருவரையும் கொண்டுவரத் தேவையான அருமருந்து  அவை என்றுணர்வோம். நம் ஆக ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகி நம்மில் ஒளிரட்டும். தவக்காலம் தொடங்கி விட்டது. தவக்காலம் இரக்கத்தின் காலம். ‘‘ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்காகப் பாதையை செம்மையாக்குங்கள்’’ இயேசு தமது பணி வாழ்வின் தொடக்கத்தில் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து நன்மை செய்துகொண்டே சென்றார். ‘‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’’ என்று அறை கூவல் விடுத்தார்.

மனம் மாறாவிட்டால் நீங்கள் அழிவீர்கள் என்றார். தவக்காலம் மனமாற்றத்திற்கான காலம். இறை வழிபாடு, இறை நம்பிக்கை வழியாக நம் ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். தீய எண்ணங்களை அகற்றி, அன்பு, கருணை, விட்டுக்கொடுக்கும் பண்பு, மன்னித்தல், அரவணைத்தல் போன்ற நல்ல பண்புகளைக் கடைபிடிக்க  வேண்டும். இறை இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்குவதற்குமுன் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்தார். இறையடியார்கள் பலர் உண்ணா நோன்பிருந்து ஜெபித்து, செயற்கரிய செயல்களைச் செய்ததாக திருவிவிலியம் எடுத்துரைக்கின்றது. பசித்தோர்க்கு உணவு, உடை வழங்குவதன் மூலம் இறைவனை மற்றவர்கள் எண்ணில் காண்கிறார்கள் என நாம் உணரும் நாளே உண்மையான தவக்காலம். பழிவாங்குதல், பகை பாராட்டுதல் போன்ற தீமைகளை, பொறுமை, தியாகம், மன்னித்தல் போன்றவற்றால் நாம் வெல்வோம்; மனம் மாறுவோம்; நோன்பிருந்து ஜெபிப்போம்; இறை அருளை அளவின்றிப் பெறுவோம்!

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்