SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரக்குடி முருகய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கியது

2018-02-13@ 14:54:47

திருச்சுழி: நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி முருகய்யனார் கோயில் மாசி மகா சிவராத்திரி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  மூலவர் மற்றும் முருகய்யனாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.  உற்சவ விழா முடியும் வரை முருகனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், நல்வழி தீபாராதனைகள் நடைபெறும். அடுத்ததாக சுவாமி வீதி உலா வருதல், கணபதி ஹோமம், ருத்ரா அபிஷேகம், பச்சாலை பரப்புதல் நடைபெறும். மேலும் வள்ளி, தெய்வானை சமேத கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அமாவாசை அன்று பொங்கல், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், இரவில் உற்சவர் திரு உலா நிகழ்ச்சி  நடைபெறும். மேலும் மயில் வாகனத்தில் புறப்பாடு அர்த்த சாம பூஜை, சிறப்பு சந்தன காப்பு   அலங்காரமும், உற்சவருக்கு தீர்த்த வாரியும் நடைபெறும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்