SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரசாமிபேட்டை அங்காளம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் விழா

2018-02-13@ 14:52:05

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, குமாரசாமிபேட்டை மைதானத்தில் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். முன்னதாக அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் வெங்கடேசன்(45) என்பவர் குண்டம் இறங்கிய போது, கால் இடறி அக்னிகுண்டத்தில் விழுந்தார். இதனால் பதறிய பக்தர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வரும் 14ம் தேதி இரவு 9மணிக்கு அங்காளம்மனுக்கும் சுவாமி பரமேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்