SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொரவி கைலாசநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

2018-02-13@ 14:51:20

விக்கிரவாண்டி:  விக்கிரவாண்டி அருகே தொரவி கைலாசநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண் சிவனடியார்கள் நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் பழமையான பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோயில் திருப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனை விரைவுபடுத்தும் நோக்கில் புதுவை, கடலூர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. இதில் சிவகாமி அம்மையார் உடனுறை நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார் சரவணன் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பரவசத்தில் ஆடிய பெண்கள்

கோயிலில் சிவனடியார்கள் முற்றோதல் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வழிபாட்டில் இருந்த பெண் சிவனடியார்கள் சிலர் திடீரென பரவசத்தில் எழுந்து நின்று நடனம் ஆடியபடியே நடராஜரை வழிபட்டனர். பெண்கள் நடனம் ஆடியதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்