SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காட்டில் தெப்பத்திருவிழா நிறைவு

2018-02-13@ 14:50:40

களக்காடு: களக்காட்டில் 3 நாட்கள் நடந்த தெப்பத் திருவிழா நிறைவடைந்தது. களக்காட்டில் ஆண்டுதோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தெப்பத் திருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று இரவு ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினர். 2வது நாளில் வரதராஜபெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி வரதராஜபெருமாள், தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி சுற்றி வந்தார். தொடர்ந்து 3ம் நாளன்று சந்தானகோபால கிருஷ்ணசுவாமி தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சந்தானகோபாலகிருஷ்ணர் விஷேச அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகளில் களக்காடு போலீசார் ஈடுபட்டனர். 3 நாட்கள் நடந்த தெப்ப உற்சவத்திறகான ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்