SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரமோற்சவம் கோலாகலம்

2018-02-13@ 14:47:20

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் தங்க அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் கடந்த 8ம் தேதி கண்ணப்பர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, 9ம் தேதி ஸ்ரீகாளத்தீஸ்வரர் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பிரமோற்சவத்தையொட்டி காலை, இரவு என்று இரண்டு வேளையும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை தங்க அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயாரும் அலங்கரிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்யாலராவ் அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சிவன் கோயில் நிர்வாக அலுவலகத்திலிருந்து பூஜைப்பொருட்களையும், பட்டு வஸ்திரங்களையும் தலை மீது சுமந்தபடி ஊர்வலமாக  சென்று அலங்கார மண்டபத்தில் கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தார். முன்னதாக அமைச்சர் தனது மனைவியுடன் கோயிலில் நடந்த ராகு கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்தார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களையும் சுவாமி படங்களையும் வழங்கி வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை (இன்று) சிவராத்திரியையொட்டி சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தியில் விரைவில் மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட உள்ளது.

கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் பக்தர்களின் வசதிற்கேற்ப தடுப்பணை கட்டப்படும். கோயிலுக்கு  வரும் அனைத்து பக்தர்களையும் சுவாமி தரிசனம் செய்ய வைக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் பனியாற்ற வேண்டும்’’என்றார். இதையடுத்து, தங்க அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயாரும் மேள, தாளம் முழங்க நான்கு மாடவீதியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது, பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப மெகா சைஸ் காளி வேடம் கிங்காங் குரங்கு வேடம் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்து வீதி உலாவில் பங்கேற்றனர். மேலும், கரகாட்டம், கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதுதவிர வீதி உலாவில் கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் வளர்க்கப்படும் காளை, குதிரைகள்  அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்தன. தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், யாழி வாகனத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

 • sirya_dead123

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X