SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கபிலேஸ்வரர் கோயில் பிரமோற்சவம் : கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா

2018-02-13@ 14:46:36

திருமலை: திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயில் பிரமோற்சவத்தின் 7வது நாளில் கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் காலை, இரவு என்று இருவேளையும் சுவாமி வீதி உலா நடக்கிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் சோமகந்தேஸ்வரரும், காமாட்சி தாயாரும் எழுந்தருளி மேள, தாளம் முழங்க நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி, பஜனைகள் பாடியபடி பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

இதையடுத்து 9 மணியளவில் கோயிலில் உள்ள சோமகந்தேஸ்வரர், காமாட்சி அம்மன் தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு தங்க திருச்சி வாகனத்தில் சோமகந்தேஸ்வரர், காமாட்சி அம்மன் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று மகா சிவராத்திரியையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும் என்பதால் அதற்கேற்ப வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவராத்திரியையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு ருத்ராபிஷேகமும், 7 மணிக்கு ரத உற்சவம், (போகி தேர்) 9 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு விசேஷ நந்தி வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை சிவபார்வதி கல்யாண உற்சவம் மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த உற்சவத்தில் தம்பதி சகிதமாக 250 செலுத்தி பங்கேற்கலாம் என்று துணை செயல் அலுவலர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்