SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 7வது நாளில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

2018-02-13@ 14:46:01

திருமலை: சீனிவாசமங்காபுரம் பிரமோற்சவத்தின் 7வது நாளில் கோலாட்டம், கரகாட்டத்துடன் சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில், பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலாவில் கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் காலை 11 மணியளவில் கோயிலில் உள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு சந்திரபிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்குமாட வீதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ரத உற்சவம் நடக்கிறது. இரவு அஸ்வ(குதிரை) வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X