SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகைக்குளம் வாகைபதி நாராயண சுவாமி கோயில் தேரோட்டம்

2018-02-13@ 14:45:23

அம்பை: அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி நாராயண சுவாமி கோயிலில் தைத்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பெருந்திருவிழா, ஆவணி தேரோட்டம் மற்றும் மாசிமக ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தை மாத தேரோட்ட திருவிழா, பிப்.2ம் தேதி  காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு தண்டிகை வாகனத்தில் ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினமும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகள், மதியம் உச்சிப்படிப்பு, உச்சிப்பால் தர்மம், இரவு 8 மணிக்கு அன்னதர்மம், காலை, மாலையில் வாகன பவனியும் நடந்தது.

இரண்டாம் திருநாளன்று அய்யா கருட வாகனத்திலும் 3ம் நாளில் சிங்க வாகனத்திலும், 4ம் நாள் அன்ன வாகனத்திலும், 5ம் நாள் சூரிய வாகனத்திலும், 6ம் நாள் நாக வாகனத்திலும், 7ம் நாள் பூப்பல்லக்கிலும், 8ம் நாள் கலி வேட்டை முடிந்து குதிரை வாகனத்திலும், 9ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் அன்று காலை 11 மணிக்கு அங்கபிரதட்சணம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. இரவு 2 மணிக்கு அய்யா ஸ்ரீமன் ஆதிநாராயண வைகுண்டர் இந்திர வாகனத்தில் வீதி உலா பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 11ம் திருநாளான நேற்று மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா ஸ்ரீஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சியும், அதிகாலை 2 மணிக்கு கொடியிறக்கமும் நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்புகொடி மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்