SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-02-13@ 10:54:56

மாசி 1, பிப்ரவரி 13, செவ்வாய்.  

சதுர்த்தசி. பிரதோஷம், மகா சிவராத்திரி.  மூங்கிலணை ஸ்ரீகாமாட்சியம்மன் பெருந்திருவிழா. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் பூச்சாற்று விழா. சீர்காழி உமாமகேஸ்வரருக்கு 3ம் காலத்தில் புனுகுகாப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீஅருண ஜடேசுவர சுவாமிக்கு 4ம் காலத்தில் தாழம்பூ சாத்துதல், சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மன் மஹாசிவராத்திரி இரவு 1 மணிக்கு அபிஷேக ஆராதனை, திருக்கோவிலூர் தாலுக்கா பரனூர் சத்திரம் திரௌபதி அம்மன் தீமிதி திருத்தேர், ஆனந்த தாண்டவபுரம் ஸ்ரீகோபால கிருஷ்ண பாரதி ஆராதனை.

மாசி 2, பிப்ரவரி 14, புதன்.

சதுர்த்தசி. திருவோண விரதம். திருக்கோகர்ணம். காளஹஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம் தலங்களில் தேரோட்டம். குரு பகவான் அதிசாரம்.

மாசி 3, பிப்ரவரி 15, வியாழன்.

அமாவாசை. ஸ்ரீசைலம்  திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம். சுகப்பிரம்ம ஆஸ்ரம தன்வந்த்ரி ஜெயந்தி. திருவையாறு அமாதீர்த்தம், திருச்சி சேய்ஞலூர் ஸ்ரீசண்டேசுவர பட்டம், திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீசுவரர் அதிகார நந்தி கோபுர தரிசனம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்பம் 1ம் நாள்.

மாசி 4, பிப்ரவரி 16, வெள்ளி.

பிரதமை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் இத்தலங்களில் தெப்போற்ஸவம். திருமுல்லைவாயில் ஸ்ரீமன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீபச்சைமலையம்மன் சந்தனகாப்பு, விசேஷ ஆராதனை.

மாசி 5, பிப்ரவரி 17, சனி.

 
துவிதியை. சந்திர தரிசனம். திருக்கோகர்ணம், காளஹஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம் இத்தலங்களில் சிவபெருமான் கிரி பிரதட்சிணம்.

மாசி 6, பிப்ரவரி 18, ஞாயிறு.

த்ருதியை. காளஹஸ்தி, ஸ்ரீசைலம், வேதாரண்யம் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீரங்கம் 1ம் நாள் தெப்பம்.

மாசி 7, பிப்ரவரி 19, திங்கள்.

சதுர்த்தி.  சதுர்த்தி விரதம். ஸ்ரீசைலம், காளஹஸ்தி இத்தலங்களில் சிவபெருமான் திருவீதியுலா. மெலட்டூர் ஸ்ரீவிநாயகர் பவனி. சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோயில் கணேசர் உற்சவம்.

மாசி 8, பிப்ரவரி 20, செவ்வாய்.

பஞ்சமி. திருச்செந்தூர், பெருவயல், காங்கேயம் இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்ஸவாரம்பம். திருச்சி நாகநாதர், கும்பகோணம், திருமழபாடி, ஸ்ரீவாஞ்சியம் மாசிமக உற்சவ ஆரம்பம், திருச்செந்தூர் மாசித் திருநாள் கொடியேற்றம்.

மாசி 9, பிப்ரவரி 21, புதன்.

சஷ்டி. கோவை ஸ்ரீகோனியம்மன் புலி வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடயத்தில் புறப்பாடு. ஸ்ரீரங்கம் கருடசேவை. காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் திருக்கோயில் துவஜாரோஹணம்.

மாசி 10, பிப்ரவரி 22, வியாழன்.

சப்தமி. கார்த்திகை விரதம். திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் கேடயத்திலும் பவனி. வேளூர் கிருத்திகை.

மாசி 11, பிப்ரவரி 23, வெள்ளி.

அஷ்டமி. காரமடை ஸ்ரீரங்கநாதர் உற்ஸவாரம்பம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பால்காவடி உற்ஸவம். திருப்பூந்துருத்தி ஸ்ரீதீர்த்தநாராயண ஸ்வாமிகள் ஆராதனை. வாஸ்து நாள்.

மாசி 12, பிப்ரவரி 24, சனி.

நவமி. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்ஸவாரம்பம். திருச்சி நாகநாத ஸ்வாமி ரிஷப வாகனத்தில் 63க்கு காட்சி கொடுத்தல், காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோஷ்டம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் சிறப்பு ஆராதனை, திருக்கச்சி நம்பிகள் சாத்துறை, கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி சுவாமி கருடசேவை. திஸ்ரோஷ்டகா.

மாசி 13, பிப்ரவரி 25, ஞாயிறு.

தசமி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருச்சி நாகநாத ஸ்வாமி திருக்கல்யாண வைபவம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கண் பெற்ற தினம், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் தென்னேரி தெப்பல், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாஸ நிகேதம் ஸ்ரீமத் ஸ்ரீசீதாராம சுவாமிகள் ஜெயந்தி. அஷ்டகா.

மாசி 14, பிப்ரவரி 26, திங்கள்.

ஸர்வ ஏகாதசி. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. குலசேகராழ்வார். காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் தவன உற்சவம், திருச்செந்தூர் ஸ்ரீஷண்முகா சிவப்பு சாத்தி தரிசனம், திருவெண்காடு ஸுப்ரமண்ய கனபாடிகள் வேதபாராயண ரிலிஜியஸ் டிரஸ்ட் (T.S.G.R. Trust) சார்பாக 80ம் வேத பாராயாணம்/மஹாருத்ரயக்ஞம் திருவானைக்காவல் க்ஷேத்ரத்தில், 80 வில்வ கன்றுகளுடன் திருக்கடையூரில் ஹேவிளம்பி மாசி 14 முதல் 25 வரை 26022018 முதல் 09032018 வரை ஸ்ரீஅமிர்த(மிருத்யுஞ்சய)கடேஸ்வரர் சந்நதியிலும், சந்நதி தெரு பசுமடத்திலும் 80ம் ஆண்டு வேத விழா
நடைபெறும். அன்வஷ்டகா.

மாசி 15, பிப்ரவரி 27, செவ்வாய்.

துவாதசி. திரயோதசி. பிரதோஷம். கரிநாள். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன், காரமடை அரங்கநாதர் இத்தலங்களில் திருக்கல்யாண வைபவம். திருச்செந்தூர் ஸ்ரீஷண்முகர் பச்சை சாத்தி தரிசனம்.

மாசி 16, பிப்ரவரி 28, புதன்.

திரயோதசி. நடராஜர் அபிஷேகம். கரிநாள். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருச்சி நாகநாத ஸ்வாமி திருமழபாடி, கும்பகோணம் ஆகிய ஸ்தலங்களில் மஹாரதம்.

மாசி 17, மார்ச் 1. வியாழன்.

சதுர்த்தசி. பெளர்ணமி. மாசிமகம். ஹோலிப்பண்டிகை. இஷ்டி காலம், காரமடை ஸ்ரீஅரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாணவேடிக்கை பாரிவேட்டைக்கு எழுந்தருளல். திருக்குவளை நெல் மகோற்சவம், திருக்குறுக்கை ஸ்ரீதோத்திர பூரணாம்பிகா சமேத ஸ்ரீகாமதகன மூர்த்தி ஸ்ரீபஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு, காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் வெள்ளி ரதம், சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் கோயில் தீர்த்தவாரி வேடுவர் அலங்காரம், காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் ஐயங்குளம் திருவூரல் உற்சவம், திருச்செந்தூர் தேரோட்டம், திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் சமுத்திர தீர்த்தவாரி, கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி தேர், ஸ்ரீஅமுதன் தெப்பம், திருமோகூர் காளமேக பெருமாள் யானைமலையில் கஜேந்திர மோஷ லீலை, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் பள்ளி கொண்டாபட்டியில் வள்ளால மகராஜனுக்கு தீர்த்தம் அருளல், வேதாரண்யத்தில் ரிஷபாரூடராய் சமுத்திர தீர்த்தம் காணல்.

மாசி 18, மார்ச் 2.  வெள்ளி.

பிரதமை. இஷ்டி காலம், காரமடை ஸ்ரீஅரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாணவேடிக்கை பாரிவேட்டைக்கு எழுந்தருளல். ஆ.கா.மா.வை. சென்னை பைராகி மடம் ஆண்டாள் ஏகதின லக்ஷார்ச்சனை, திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி புறப்பாடு.

மாசி 19,  மார்ச் 3. சனி.

பிரதமை. துவிதியை. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. காங்கேய நல்லூர் ஸ்ரீ முருகப் பெருமான் விடாயாற்று. வேளூர் 3 தின சூரிய பூஜை ஆரம்பம், காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தவன உற்சவம், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் தவன உற்சவம்.

மாசி 20, மார்ச் 4. ஞாயிறு.

த்ரிதியை. பிரம்ம கல்பாதி. நித்தம் ஸ்ரீ மாரியம்மன் பாற்குடக் காட்சி. எறிபத்த நாயனார் குருபூஜை. பெரிய நகசு. வேளூர், திருவாரூர் திருவானைக்காவல் முதலிய தலங்களில் ஸ்ரீசந்திரசேகரர் உற்சவ ஆரம்பம்.

மாசி 21,  மார்ச் 5. திங்கள்.

சதுர்த்தி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் மஞ்சப் பாவாடை தரிசனம். பால்குடம், காவடி ஆட்டம், அரண்மனையில் பொங்கல்.

மாசி 22, மார்ச் 6. செவ்வாய்.

பஞ்சமி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. பூக்குழி விழா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருவெண்காடு முதலிய தலங்களில் ஸ்ரீசந்திரசேகரர் உற்சவ ஆரம்பம். திருவெண்காடு ஸ்ரீஅேகாரமூர்த்தி திருத்தேர்.

மாசி 23, மார்ச் 7.புதன்.

சஷ்டி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி உற்சவாரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வாழ்வார் தீர்த்தவாரி. திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி பஞ்சமூர்த்தி, தீர்த்தவாரி, காங்கேயநல்லூர் லக்ஷதீபம்.

மாசி 24, மார்ச் 8, வியாழன்.

சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மாசி 25, மார்ச் 9, வெள்ளி.

அஷ்டமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. மாலை உஞ்சல் சேவை. மாடவீதிப் புறப்பாடு. திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி தெப்ப உற்சவம்.

மாசி 26, மார்ச் 10,  சனி.

நவமி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கோவர்த்தன கிரி பந்தலடி சென்று திரும்புதல். கண்ணன் அலங்காரம். திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி சண்டிகேஸ்வரர் உற்சவம்.

மாசி 27, மார்ச் 11, ஞாயிறு.

தசமி, மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி ராமர் திருக்கோலமாய்க் காக்ஷியருளல், காரிய நாயனார் குருபூஜை.

மாசி 28, மார்ச் 12, திங்கள்.

ஏகாதசி. சீதாதேவி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கண்டபேரண்ட பட்க்ஷிராஜன் வாகன அலங்காரம்.

மாசி 29, மார்ச் 13, செவ்வாய்.

துவாதசி. திருவோண விரதம், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி காலை பல்லக்குஊர்வலம்; இரவு ராஜாங்க அலங்காரம். சிறிய நகசு.

மாசி 30, மார்ச் 14, புதன்.

திரயோதசி.  பிரதோஷம். ஷடசீதி புண்ணிய காலம், காரடையான் நோன்பு, நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவாரம்பம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்