SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரபேஸ்வரர் கோயிலில் லட்சார்சனை பெருவிழா : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

2018-02-12@ 15:38:20

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே உள்ள தாடகைமலை அடிவாரத்தில் உள்ள கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் கோயிலில் நேற்று லட்சார்சனை பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை, மகா கணபதி ஹோமம் மற்றும் புண்ணியாகவாஜனம், பஞ்ச கவ்யம் நடந்தது. அதன்பின் கலச ஆவாஹனம், சரபேஸ்வரர் மூல மந்திர திரவியாகுபதி நடந்தது. இதை தொடர்ந்து, மகா அபிஷேக சிறப்பு பூஜையும் அதன்பின் மகா சங்கல்பம், சரபேஸ்வரர் லட்சார்சனையும் துவங்கியது. பயம், துன்பம் நீங்கவும், தொழில் தடை மற்றும் திருமணதடை நீங்க நடந்த இந்த லட்சார்சனை நிகழ்வு மதியம் 1 மணிவரையும், அதன்பின் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்