SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரகவாசிகளின் உணவு

2018-02-08@ 14:41:03

நரகத்தின் தன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கும் போது ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்: நரகவாசிகளுக்குப் பசி ஏற்படுத்தப்படும். அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்ற வேதனைக்கு நிகரானதாக இருக்கும். நரகவாசிகள் உணவு கேட்பார்கள். அப்போது முட்செடியே அவர்களுக்கு உணவாக அளிக்கப்படும். அது அவர்களைக் கொழுக்கவும் வைக்காது, பசியையும் போக்காது. அவர்கள் மறுபடியும் உணவு கேட்பார்கள். அப்போதும் அவர்களுக்கு விக்கிக் கொள்ளும் உணவே வழங்கப்படும். உலகில் விக்கிக்கொள்ளும்போது தண்ணீர் போன்ற பானங்களால் அதைச் சரிசெய்து கொண்டதை நினைவுகூர்வர். எனவே பருகுவதற்குத் தண்ணீர் கேட்பார்கள். அப்போது அவர்களிடம் இரும்புக் கிடுக்கியில் வைத்துக் கொதிநீர் கொடுக்கப்படும். அது அவர்களின் முகத்தருகே செல்லும்போது அவர்களின் முகம் பொசுங்கிவிடும்.

அந்தக் கொதிநீர் அவர்களின் வயிற்றினுள் சென்றால் அவர்களின் வயிற்றிலுள்ள அனைத்தையும் துண்டுதுண்டாக்கிவிடும். அப்போது அவர்கள், “நரகத்தின் காவலர்களான வானவர்களை அழையுங்கள். அவர்கள் நமக்காக இறைவனிடம் பிரார்த்திக்கட்டும்” என்று கூறுவார்கள். அப்போது நரகத்தின் காவலர்கள் (வானவர்கள்) நரகவாசிகளை நோக்கி, “உங்களின் இறைத்தூதர்கள் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள், “ஆம்.கொண்டு வந்திருந்தார்கள்.” (ஆனால், நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாய் இருக்கவில்லை என்பார்கள்) “அப்படியானால் நீங்களே இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்று அந்தக் காவலர்கள் கூறிவிடுவார்கள். இந்த நரகவாசிகள் பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த நிராகரிப்பாளர்களின்  பிரார்த்தனை பயனற்றுப் போய்விடும். நரகவாசிகள் வேதனையால் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படித் துன்புறுவதற்குப் பதிலாக ஒரே அடியாகத் தங்களை இறைவன் அழித்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நரகக் காவலர்களின் தலைவரான மாலிக் எனும் வானவரை அழைத்து, “மாலிக்கே, இறைவன் எங்கள் கதைகளை முடித்து விட்டால் நன்றாக இருக்குமே” என்பார்கள். அதற்கு மாலிக், “நரகத்தில் வாழ்வும் இல்லை. மரணமும் இல்லை..நீங்கள் இப்படியேதான் கிடப்பீர்கள்” என்று கூறிவிடுவார்கள். நபிமொழிகளில் மேலும் ஒரு  செய்தி காணப்படுகிறது. நரக வாசிகள் மாலிக்கை அழைத்ததும் அவர் உடனே பதில் அளிக்க மாட்டார். நரகவாசிகளின் கதறலுக்கும் காவலர் தலைவர் பதில் அளிப்பதற்குமான இடைவெளி ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நரகத்தின் கோரக் காட்சிகள் குறித்தும் நரகவாசிகளுக்குத் தரப்படும் தண்டனைகள் குறித்தும் இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன. இந்தக் கடுமையான இழிநிலையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஒரே வழி உலகில், இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். அத்துடன் “இறைவா, நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக” என்று தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்த வண்ணமும் இருக்க வேண்டும்.

இந்த வார சிந்தனை

“இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக.” (குர்ஆன் 2:201)

 சிராஜுல்ஹஸன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bunfestival

  ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • metrochennai

  சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

 • protest_chennai123

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 • satteravai_stalin11

  சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

 • PakistanistudentUSgunshot

  அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்