SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கோலாகலம்

2018-02-07@ 14:39:16

நெல்லை: புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருத்தல பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. விழாவை காண பக்தர்கள் நடைபயணமாக வந்ததால் அதை சுற்றியுள்ள பகுதிகளும் திருவிழா கோலம் பூண்டது. புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை ஆகியன நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நேற்று முன்தினம் மாலை பாளை மறை மாவட்ட முதன்மைக்குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் நடந்தது.

திருத்தல திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. கல்லிடைக்குறிச்சி பங்குத் தந்தை பாக்கிய செல்வன், பாளை ஆயரின் செயலர் தீபக் மைக்கேல் ராஜா, பாளை மறை மாவட்ட ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜ், வீரவநல்லூர் பங்குத்தந்தை தினகரன், பாளை மறை மாவட்ட செயலக முதல்வர் அந்தோனி குரூஸ், ஜவஹர்நகர் பங்குத்தந்தை அருள்அம்புரோஸ், புளியம்பட்டி பங்குதந்தை மரிய பிரான்சிஸ், ஜோமிக்ஸ், ஸ்டீபன், குழந்தைராஜ், அந்தோணிராஜ், துரைராஜ், பீட்டர், நேசமணி மற்றும் அருட்தந்தையர்கள் திருப்பலி நடத்தினர்.

காலை 10 மணிக்கு சாந்திநகர் தேம்பாவணித் தோட்டம் ஜோசப் கென்னடி தலைமையில் குணமளிக்கும் வழிபாடு நடந்தது. காலை 11.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கூட்டு திருப்பலி நிகழ்வுக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் நடைபயணமாக புளியம்பட்டி வந்தனர்.

நடைபயணம் வந்தவர்கள் நேர்ச்சையாக அணிந்து வந்திருந்த அந்தோனியாரின் தவ உடைகளையும், ஜெபமாலைகளையும் புனித கிணற்றில் குளித்து விட்டு அந்தோனியார் பாதத்தில் சமர்ப்பித்தனர். அந்தோனியாருக்கு நேர்ச்சைக்காக மொட்ைட போடவும், புனித கிணற்றில் குளிக்கவும் பெரும் கூட்டம் முண்டியடித்தது. கொடிமரத்தின் கீழ் திரளான பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை அளித்து, அங்குள்ள 13 மரங்களை சுற்றி வந்தனர். விழாவை ஒட்டி நேற்று மதியம் அசன விருந்தும் வழங்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணிக்கு குருவிகுளம் பங்குத்தந்தை பால்ராஜ், நாலாட்டின்புதூர் உதவி பங்குத்தந்தை எபின் ஆகியோர் திருப்பலி நடத்தினர். திருவிழாவில் இன்று திருப்பலி, மறையுரையை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை மரிய பிரான்சிஸ், உதவி பங்குத்தந்தையர்கள் மிக்கேல், சுதன், ஜேக்கப் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-03-2018

  20-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • SausageDogWalkLondon

  லண்டனில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான சாஸேஜ் வகை நாய்களின் அணிவகுப்பு: கண்கவர் புகைப்படங்கள்

 • Congress84thNationalConference

  காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு நேற்றுடன் நிறைவு: சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

 • TurkishForcesAfrin

  சிரியாவின் ஆஃப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி ராணுவம்: குர்திஷ் மக்களுக்கான சிலையை தகர்த்தது

 • MicrosoftWordTeacher

  கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்