SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் அருகே திம்மராய சுவாமி கோயில் தேரோட்டம்

2018-02-06@ 11:33:46

ஓசூர்: ஓசூர் அருகே திம்மராய சுவாமி கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓசூர் தாலுகா பாகலூர் அருகே குடிசெட்லுவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி தினமும் விசேஷ பூஜைகள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அபிஷேகமும், அலங்கார சேவையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகமும், ரதத்திற்கு புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.தேரோட்ட விழாவில் குடிசெட்லு, பாகலூர், பேரிகை, சூளகிரி மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். நேற்று திருமஞ்சன சேவை மற்றும் மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்