SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்

2018-02-05@ 14:21:56

பொள்ளாச்சி: பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வேண்டி  பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில், ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டு தோறும், பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. அதுபோல், இந்த ஆண்டில் வரும் மார்ச் ஏப்ரலில் 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள்,  தேர்வில் கூடுதல் மதிப்பெண்பெற்று வெற்றிபெற வேண்டி, நேற்று காலையில் ‘ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்’ சிறப்பு ஹோமம் நடந்தது.

இதில், கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், முதன்மைபெறவும், வாழ்க்கையில் வெற்றிபெறவும் மாணவ, மாணவிகளின் பெயர், நட்சத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின் நடந்த சிறப்பு ஹோமம் நிகழ்ச்சியின் போது, நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். காலைநேரத்தில் சிறப்பு ஹோமம் நிறைவடைந்தாலும், அதன்பின்னும் மாலை வரை பல்வேறு பகுதியிலிருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், கோயிலுக்கு வந்து லட்சுமிநரசிம்மரை தரிசித்து சென்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்