வலி தீர்க்கும் கலி தீர்த்த ஐயனார்
2018-02-03@ 09:59:54

முத்துப்பேட்டை வேதாரண்யம் சாலையின் வடக்குத் திசையில் கோடியக்கரைக்கு 10 கி.மீ. முன்பாக ‘‘கலி தீர்த்த அய்யனார்’’ ஆலயம் மிக அற்புதமாக, பல வண்ணக் களஞ்சியமாக எழில்யுற அமைந்துள்ளது. எங்குப் பார்த்தாலும் மனித சிலைகள். குதிரையுடன் வீரர்கள் சிலைகள். இங்கே, ‘‘கலி தீர்த்த அய்யனார்’’ சுயம்புவாகத் தோன்றி, வேண்டி வந்தோரின் இன்னல்களை தீயசக்திகளை களைந்தெறியும் கண்கண்ட தெய்வமாக, கலியுக மூர்த்தியாக அருள்மழை பொழிகின்றார். வீரனார், லாடசாமி, பெரியாச்சி என்று பரிவார தேவதைகளும் உள்ளனர். கலி தீர்த்த அய்யனார் நம் வலியை நிச்சயம் தீர்ப்பார்.