SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி

2018-02-02@ 14:09:41

செங்கோட்டை: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முருகனை பண்பொழி நகரீஸ்வர முடையார் கோயிலில் இருந்து திருமலை கோயிலுக்கு வழியனுப்பும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலில் இருந்து பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலுக்கு முருகனை அழைத்து வந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி பண்பொழி கீழரத வீதியில் அன்ன கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் முருகப்பெருமான் மான், பசு, சிம்ம, ஆட்டுகிடா வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

5ம் நாள் சட்ட தேர் நிகழ்ச்சியும், 7ம் நாள் முருகர் சண்முகர் எதிர் சேவை காட்சியும், 9ம் நாள் தேர் திருவிழாவும், 10 நாள் தைப்பூச திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று திருமலை முருகன் பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து திருமலை கோயிலுக்கு திரும்பும் பிரியா விடை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணிக்கு பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலில் அன்ன கொடி இறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு முருகனை வழியனுப்பும் பிரிவு உபசார விழா பண்பொழி ஐந்து புளி மண்டபத்தில் நடத்தது. இதில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர்  அருணாசலம்  செய்திருந்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்