SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகான்களின் உத்தரவு பெட்டி

2018-01-31@ 12:56:47

நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும் காஞ்சி மாநகருக்கு மேற்கே பாலாற்றங்கரையில் இருக்கும் வட இலுப்பையில் காமாட்சி சமேத மருந்தீஸ்வரர் ஆலயத்தில் பல மகான்கள் கால் பட்ட மகோன்னத பூமியில், பல சித்தர்கள், மகான்கள், ஞானிகள், சங்கீத வித்வான்கள் வந்து தங்கி இருந்த தலத்தில் ஏற்றம் தரும் யந்திர கூரை உள்ளது. ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சந்நதியும் உள்ளது. இத்தலத்தில் பிரதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க தாடங்க பிரதிஷ்டையும் குரு பூஜையும் நடைபெறவுள்ளது.

இன்னொரு ஆச்சரியம் என்னவெனில் இந்த காமாட்சி சமேத மருந்தீஸ்வரர் ஆலயத்தில் உத்தரவு பெட்டி உள்ளது. இந்தியாவில் இரண்டு இடத்தில் உள்ளது. ஒன்று, சிவன் மலை ஆண்டவன் கோயிலில் (ஈரோடு அருகில்) உள்ளது, மற்றொன்று இங்கு உள்ளது. ஒருவர் தியானித்து வணங்கினால் கனவில் வந்து அருளும் ஒரு பொருளை இந்த உத்தரவு பெட்டியில் வைக்க வேண்டும். அந்த பொருளுக்கு ஏற்றார் போல் (மண், பூமி உருண்டை, நெல், உணவு தானியங்கள், பூட்டு போன்ற பொருட்களுக்கு ஏற்ப) பலன் தரும், இது வாசி யோகத்தால் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

ந. பரணிகுமார்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்