SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தைப் பூசத் திருநாளில்...

2018-01-31@ 08:44:29

சீதைப்பூச நாளில் பழநியில் முருகனின் அபிஷேக ஆராதனைகளை தரிசித்தால் பாவங்கள் விலகும். இன்று தம்பதி சமேதராய் நற்காரியங்கள் செய்ய வளமான வாழ்வு கிட்டும்.

பராசக்தி, தாமி ரபரணியில் நீராடி இறைவன் அருள் பெற்றது தைப்பூசத்தன்றுதான். இன்று சிவன், முருகன், மகாலட்சுமி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். வியாழனன்று தைப்பூசம் வந்தால் அன்றைய தினம் செய்யப்படும் மகாலட்சுமி பூஜை மகத்தான பலன்களைத் தரும்.

வியாழனன்று வரும் தைப்பூச தினத்தில் திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரம், காசியப்பநாதர் ஆலயத்தில் உள்ள நடராஜருக்கு புனுகு சாத்தி சிறப்பு பூஜைகள் செய்வார்கள். எனவே அத்தல நடராஜர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். அன்று இத்தல ஈசனுக்கு தேனாபிஷேகம் செய்வார்கள். இவ்வாண்டு தைப்பூசம் வியாழக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

நடராஜரும் சிவகாமியும் தம் ஆனந்த நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர்களுக்கு பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினிக்கும் ஆடி, தில்லையில் காட்சி தந்தது தைப்பூச தினத்தன்றுதான். இந்நாளில் சிவகங்கை தீர்த்தக் கரையில் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். ஆலய வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவும் விமரிசையாக நடைபெறும். அப்போது பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி முனிவர் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருள்வார்கள்.

தைப்பூசத்தன்று வள்ளி மலையில் வேல் வகுப்புப் பாடலை பஜனையாக பக்தர்கள் பாடி மகிழ்வது வழக்கம்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில்தான் சொக்கரும் மீனாட்சியும் தீர்த்தவாரி உற்சவம் காண்பார்கள். இக்குளம் வெட்டும் போது கிடைத்த மிகப்பெரிய விநாயகர்தான் மதுரை முக்குறுணிப் பிள்ளையார்.

மயிலையில், பூம்பாவையின் அஸ்தி கலசத்தை வைத்து கபாலியைக் குறித்து மனமுருக வேண்டி 11 பதிகங்கள் பாடினார் திருஞான சம்பந்தர். சிவனருளால் அஸ்தி கலசத்திலிருந்து பூம்பாவை உயிரும் உடலும் பெற்று எழுந்து வந்தாள். சம்பந்தரின் அந்தப் பாடல்கள் ஒன்றில், ‘தைப்பூசம் காணாதே போதியே பூம்பாவாய்’ எனும் வரி குறிப்பிடத்தக்கது. அதாவது அந்நாளிலேயே தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது.

குளித்தலை, கடம்பவனநாதர் ஆலயம் எதிரே அகண்ட காவிரி ஓடுகிறது. தைப்பூசத்தன்று கடம்பவனநாதர், சப்தகன்னிகளுக்கு தரிசனமளிப்பார். அதையொட்டி அருகேயுள்ள சிவாலய உற்சவர்களும் சப்பரத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் காவிரிக்கரையில் கூடுவர். எட்டு சிவாலய மூர்த்திகளை அங்கு ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

மேல்மருவத்தூரில், ஆயிரக்கணக்கான பெண்கள் தீபத்தை கைகளில் ஏந்தியவாறு ஜோதி வளாகத்திற்குள் ஊர்வலமாக வருவார்கள். அங்கு தீபத்திற்கு திருஷ்டி கழிக்கும் சடங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும். பின் அடிகளார் முன்னிலையில் பூச ஜோதி ஏற்றப்படும்.

சிவகங்கை மாவட்டம்& நாட்டரசன் கோட்டை, கண்ணாத்தாள் ஆலயத்தில் தைமாதம் முதல் செவ்வாயன்று உலகெங்கிலும் உள்ள நகரத்தார் குடும்ப கன்னிப்பெண்கள் ஒன்று கூடி பொங்கலிடுவார்கள். அன்று ஆலயத்தில் பெண் பார்க்கும் நிகழ்வும் நடக்கும். இது ஒரு ஆன்மிகம் சார்ந்த வித்தியாசமான சுயம்வரமாகக் கருதப்படுகிறது. கண்ணாத்தாள் அருள், அவித்த நெல்லையும் முளைக்க வைக்கும் சக்தி படைத்தது.

திருவேற்காடு கருமாரி ஆலயத்தில் தைப்பூச விழா 19 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • unassemblybaby

  முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

 • tiltinghouseamerica

  அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

 • bridgecollapsed

  கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

 • 25-09-2018

  25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்