SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவடி சுமந்து வந்தோம்... கந்தனை காண வந்தோம்...

2018-01-31@ 08:38:24

பன்னிருகை வேலவனே
பழனிமலை சுவாமியே வா!
காவடிகள் சுமந்து வந்தோம்
பக்தர் நெஞ்சமதில் அமர்ந்திடுவாய்!
யானை முகன் சோதரனே
பச்சைமயில் வாகனனே!
பழத்தால் அபிஷேகம் செய்தோம்-
மனபாரம் இறக்கி வைப்பாய்!
கொஞ்சி கொஞ்சித் தமிழ்பேசும்
கிள்ளைமொழி பாலகனே
கோலமயில் குறத்தி மகள்
கொஞ்சும் அழகன் முருகனய்யா!
பக்தர் குறை தீர்ப்பதற்கு
மலை இறங்கி வருபவனே!
ஞானத்தாய் பெற்றெடுத்த
ஞானகுரு நீயல்லவா..!
காவடிகள் சுமந்து கொண்டு
காவடிசிந்து பாடிக்கொண்டு
மலையேறி தரிசனம் கண்டோம்
மனதார வணங்கி நின்றோம்!
சந்தனம் மணக்க வரும்
அரோகரா கோஷமதை
ஆறுமுகம் ஏற்றிடுவான்-எங்கள்
ஐம்புலன் ஆட்சி செய்வான்!
தாய், தந்தை உனக்குண்டு
அண்ணன், தம்பி உறவும் உண்டு
ஆறுபடை வீடுடைய முருகனுக்கு
அன்புசொல்ல துணை இருவருண்டு!
பால்காவடி ஏற்று நீயும்
பாவங்கள் விலக்கிடுவாய்!
பன்னீர்க்காவடி ஏற்று நீயும்
பெருமைகள் சேர்த்திடுவாய்!
வேல்காவடி சுமந்து வந்தோம்
வெற்றிகள் குவித்திடுவாய்!
குருநாதன் உதித்த தினம்
தைப்பூசத் திருநாளாம்
எங்கள் குரு குமாரசாமி
குறையில்லா வாழ்வருள்வாய்!
கண்மலர் திறந்ததுமே
கந்தா உந்தன் நினைவய்யா!
கலையின் திருவுருவாய்
மலை மேல் வசிப்பவனே!
ஆதாரம் கேட்பவருக்கு-நீ
வெட்டவெளி ஆகாயம்!
உனை நாடாத பேருக்கு
இல்லை உலகில் ஆதாயம்!
காற்றில் பயணிக்கும்
பூவின் நறுமணமே!
மனதில் நிறைந்துவிட்ட
குறிஞ்சி தமிழ் அமுதே!
வேலை வணங்குவது
நாள்தோறும் என் வேலை!
மனதில் வரும் அமைதி
பனி விழும் அதிகாலை!

- விஷ்ணுதாசன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bunfestival

  ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • metrochennai

  சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

 • protest_chennai123

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 • satteravai_stalin11

  சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

 • PakistanistudentUSgunshot

  அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்