SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

108 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ பிரதோஷம்

2018-01-29@ 10:49:42

ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமையான இன்று வந்திருக்கும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

இந்த நாளில் திங்கள் கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி, இந்த மூன்றும் ஒன்றாக வருவதால் அபூர்வ நாளாக கருதப்படுகிறது. இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

இந்த அபூர்வ பிரதேஷம் அன்று நாம் சந்தனம், பால், இளநீர் கொண்டு சிவனுக்கும், நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

இந்த பிரதோஷ வழிபாட்டால் தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

நாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மையை பெறுவோம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்