SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவதிருப்பதிகளில் 7வது திருப்பதி மழை வளம் அருளும் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர்

2018-01-27@ 13:00:23

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் 7வது திருப்பதியான திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரையில் அமைந்துள்ள மகரநெடுங்குழைக்காதர் கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. ஸ்ரீமந்  நாராயணன் திருமகளை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார்.

எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இந்த கோயில் அமைந்த தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வந்தார். இவ்வாறாக பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் குண்டலங்களை திருமாலுக்கு அளித்தார்.

தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்ததால் போரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இங்கு  பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் அவர்  மகர  நெடுங்குழைக்காதர் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்)என அழைக்கப்படுகிறார். வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இங்கு வந்து  தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிரார்த்திக்கும் பிராத்தனைகள் இன்றும் பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.

விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு  இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதர் பாடியுள்ளார்.

இக்கோயிலில் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

கோயிலுக்கு செல்ல நெல்லை, திருவைகுண்டம், திருச்செந்தூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்