SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 60

2018-01-23@ 12:09:11

ஆண்டுக்கொரு முறை ஆன்மிக உலா... சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தமானது. கேரளத்தை தோற்றுவித்த பரசுராமரே ஐயப்பன் கோயிலையும் ஸ்தாபித்தார். அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எருமேலி தர்மசாஸ்தா கோயில், பந்தளம் வலியக்கோவில் போன்றவற்றையும் பரசுராமரே ஸ்தாபித்தார். இவற்றை ‘பஞ்ச சாஸ்தா’ கோயில்கள் என்கின்றனர். இக்கோயில்களில் ஐயப்பன் குழந்தையாக, பாலகனாக, குடும்பஸ்தராக பல்வேறு உருவங்களில் காட்சியளிப்பதும் சிறப்புச் சேர்க்கிறது.ஐயப்ப பக்தர்கள் இந்த அத்தனை கோயில்களிலும் வலம் வந்து ஆன்மிக கொண்டாட்டத்தில் குளித்தெழுந்தது மகத்தான அனுபவ மகிழ்வை அள்ளித் தந்திருக்கிறது.

ஆண்டுக்கொருமுறை நடக்கிற இப்பயணம், ஒட்டுமொத்த ஆண்டிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கும் மன உறுதியை கற்பிக்கின்றன. மகரஜோதி, மகரவிளக்கு நிகழ்வுகளுக்குப்பிறகும் தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடக்கின்றன. சன்னிதானத்தில் ஆலங்காடு குழுவினரால் நடத்தப்படும் சிறப்பு சீவேலியில் அலங்கரித்த யானை மீது உற்சவ மூர்த்தியான மாளிகப்புறத்தம்மன் கிளம்பியதும், அவரது கோயிலில் இருந்து பாரம்பரிய இசை முழங்கப் புறப்பட்டு புனித பதினெட்டாம் படியை அம்மன் வந்தடைந்து, அங்கே பூஜை நடந்ததும் அளப்பறியது.

இரண்டாம் நாளில் படிபூஜை, மூன்றாம் நாளில் மாளிகப்புறத்தில் பல நிறப் பொடிகளால் உருவாக்கப்பட்ட ‘கலமேலெழுத்து’ எனும் ஐயப்பன் கோல பூஜை நடந்தன. நான்காம் நாளில் சந்தன அபிஷேக சிறப்பு ஆராதனையும் நடந்தது. ஐந்தாம் நாளில் மாளிகபுறத்தம்மன் பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் யானைமீது அமர்ந்து சரங்குத்திக்கு வந்தார். அங்கே கன்னி ஐயப்பமார்களால் சொருகப்பட்ட அம்புகளைக் கண்டு ஏமாற்றத்துடன், தன் இருப்பிடம் திரும்பி கன்னியாகவே காத்திருக்கிறாள். ஐயப்பனும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.ஆறாம் நாள் சிறப்பு பூஜையுடன் நடை சாத்தப்பட்டு விழா நிறைவடைந்திருக்கிறது. இந்த இறுதிநாட்கள் பக்தர்களுக்குள் நிறைத்துப்போன ‘நிறைவான’ வாழ்வியல் வழிகாட்டல்கள் ஏராளம். இது மிச்ச நாட்களிலும் தொடரும்.

(நாளையும் மலையேறுவோம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்