SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 59

2018-01-20@ 13:18:45

கணமலையும்... கம்பகத்து வளைவும்...

மாலையிட்டு, விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு பயணிக்கிற சரணபாதையில் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. எரிமேலியிலிருந்து முக்கூட்டத்தற, பம்பாவாலி வழியாக பம்பைக்கு உள்ள பாதையில் கணமலை இருக்கிறது. ஏற்ற, இறக்கத்துடன் அபாய வளைவுகளைக் கொண்டுள்ள இந்த கணமலையில் ஏராளமாக ஆபத்துகள் காத்திருக்கின்றன. இப்பாதையில்  அறிமுகம் இல்லாத டிரைவர்கள் மிகுந்த வேகத்தில் வாகனத்தை இயக்கினால், எதிரே வருகின்ற வாகனத்திற்கு வழி விடுவதற்காக உடனே திருப்புவதால் பெரும் விபத்து நிகழ்ந்து விடுகிறது. இதேபோல், கணமலை இறக்கத்தில் வாகனங்கள் இறங்கும்போதும் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் கூடுதல் கவனம் தேவை. பம்பை நதியில் கணமலையை கடக்கின்ற பாதையான சாலை அகலம் குறைவானதாக இருக்கிறது.

எனவே இப்பகுதியில் குறைந்த வேகத்தில் செல்வது மிக அவசியம். இந்த ரோட்டில் முன்னறிவிப்பு போர்டுகளும் உள்ளன. இதேபோல், வடசேரிக்கரை ரூட்டில் உள்ளது கம்பகத்து வளைவு. இளாகைக்கும் பாப்பள்ளிக்கும் நடுப்பகுதியில் உள்ள அபாய வளைவு இது. வனப்பகுதி என்பதால் இரவில் பனி படரும். இதனால் சாலையின் இருபுற பள்ளங்கள் பக்தர்களின் கண்களுக்குத் தெரிவதில் சிரமம் இருக்கிறது. அட்டத்தோடு என்ற இடத்திலும், கம்பகத்து வளைவிலும் பனி படருவதுதான் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இரவு, மழை நேரங்களில் பனி படர்வதால் சாலையை சரியாக கணிக்க முடியாத சூழல் ஏற்படுவதுண்டு. இப்பகுதியில் வேகம் குறைத்து ஐயப்ப பக்தர்கள் வாகனம் இயக்குவது விபத்தில்லா பயணம் தரும்.

(நாளையும் மலையேறுவோம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்