ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 58
2018-01-19@ 15:57:02

தவக்கோலம் காரணம்
சபரிமலையில் அருளாட்சி புரிகிற ஐயப்பனின் தவக்கோலம் அதிஅற்புதமானது. தன் அவதார காரணம் பூர்த்தி பெற்று விட்டதாகவும், அதனால் சபரிமலையில் தவமிருக்க போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டும் என்றால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் ஐயப்பன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இன்றும் நாம் ஐயப்பனை அந்த தவக்கோலத்திலேயே தரிசித்து வணங்குகிறோம். இந்த கோலத்தை காணும்போது, ஐயப்பனின் இரு கால்களிலும் துண்டு கட்டி இருப்பது போன்று தெரியும். இதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஒருமுறை ஐயப்பனை காண, அவரை வளர்த்து ஆளாக்கிய பந்தள மகாராஜா வந்தார்.
அவர் வந்தபோது தந்தை என்ற காரணத்தால், அவருக்கு மதிப்பு வழங்கும் நோக்கத்தில் ஐயப்பன் எழ முயன்றார். இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக, தான் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை, ஐயப்பனை நோக்கி தந்தையான பந்தள மகாராஜா தூக்கி போட்டாராம். அப்போது அந்த அங்கவஸ்திரம், ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் என்றும் கூறுகிறார்கள். ஐயப்பனின் இந்த திரு உருக்காட்சி, பல்வேறு வாழ்வியல் பண்புகளையும் பக்தர்களுக்கு உணர்த்தி நிற்கிறது.
(நாளையும் மலையேறுவோம்...)
மேலும் செய்திகள்
சபரிமலை ஐயப்பன்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
ஆகம நெறியில் ஐயப்பன்
அரவணைப் பாயசம்
மடிப்பாக்கத்திற்கு விரும்பி வந்த மணிகண்டன்
இருமுடி கட்டு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது