SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 57

2018-01-18@ 14:27:12

மந்திரங்கள் தருமே மேன்மை...

ஐயப்பனை தரிசிப்பதற்கென மாலையிட்டு, விரதமிருக்கிற பக்தர்களின் பஜனைகள், தியானங்கள், தொடர் மந்திர வழிபாடுகள், இக்காலத்தை மேம்படுத்துகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலானது ‘சுயம்புலிங்க பூமி’, ‘யாக பூமி’, ‘பலி பூமி’, ‘யோக பூமி’, ‘தபோ பூமி’, ‘தேவ பூமி’, ‘சங்கமம் பூமி’ என்ற 7 சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று ஒரு சேர கோஷமிடுகின்றனர். இந்த சரண கோஷம், ‘நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம்’ எனும் பொருள் தருகிறது. இதேவழியில்  ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரமும் மகத்தானது. ‘ஓம்’ ஐந்து வித ஒலிகள் உள்ளடக்கியது. அ, உ, ம என்ற 3 எழுத்துகளுடன், ‘ம்’ ஒலியும், அதன் ‘நாதமும்’ இணைந்து ஐந்தாகிறது. ‘அ’ பிரம்மனையும், ‘உ’ விஷ்ணுவையும், ‘ம’ பரம்பொருளையும் குறிக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 5 தொழில்களையும் இத்தெய்வங்கள் செய்கிறார்கள். உலக இயக்கம் குறிப்பது ‘ஓம்’. கலைஞானம் எனும் கல்வியறிவு, மெய்ஞ்ஞானம் எனும் தவ அறிவு அத்தனைக்கும் ‘ஓம்’ வாசல் என்கிறது  திருவிளையாடற்புராணம். எனவேதான் எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’மில் துவக்குகிறோம். இவ்வகையில், ‘ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந; ப்ரசோதயாத்’ என்பது காயத்ரி மந்திரமாகும். இது, ‘‘யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக,’’ என்கிறது. நாம் பிரார்த்தனை செய்தால் நம்மை பகவான் பார்வை படும் தூரத்தில் கொண்டு விடும். உபவாசம் தவறாது இருந்தால் பகவானுடைய வாயிலருகில் கொண்டு போய்ச் சேர்க்கும். தான தருமங்கள் செய்தோமானால் நம்மை பகவானின் இதயத்தில் இடம்பெறச் செய்து விடும். சபரிமலை விரத காலத்தில் மேற்கொள்ளும் தொடர் தியானங்கள், கடவுளின் முழு நேசராக நம்மை மாற்றும் மந்திரத்தைச் செய்கிறது.   
 
(நாளையும் மலையேறுவோம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்