SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வில் இருளை நீக்கும் பொங்கல் வழிபாடு...

2018-01-13@ 13:16:41

அயனம் என்றால் காலம், பாதை, பயணம் என பொருள் கொள்ளலாம். சாஸ்திரங்களில் தட்சிணாயனம், உத்திராயனம் என காலத்தை 2 பிரிவுகளாக குறிப்பிட்டுள்ளனர். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் உத்திராட நட்சத்திரம் 2&ம் பாதத்தில் நுழையும்போது உத்திராயன புண்ணிய காலம் துவங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழி. கிராமத்தில் இன்றளவும் தை மாதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். கல்யாணம் பேச ‘தை‘ வரட்டும், ஜாதகம் தருகிறேன் என்று கூறுவார்கள். கொடுக்க வேண்டிய பணத்திற்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு, பணம் புரளும்.

சுப விசேஷங்களுக்கு தை மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, கிரக பிரவேசம், தொழில் தொடங்குதல் என எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது. நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் தைப் பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு காரணம் பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் உழைப்பையும், உழைப்பாளிகளையும் போற்றி வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உழவர் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் போற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமங்களில் ஒரு வாரம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. அன்றைய தினம் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கின்றனர். இதன் மறுநாள் பொங்கல் பண்டிகை.

வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கல் வைப்பார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அன்று அதிகாலையே மாட்டை குளிப்பாட்டி கொம்புகள், கால் குளம்புகளில் வண்ணம் பூசி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை சூட்டி தூபதீபம் காட்டி பூஜித்து வணங்குவார்கள். 3ம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று விருந்து, விழா என்று குதூகலமாக பொழுதை கழிப்பார்கள். ஒரு சிலர் கடற்கரை, விளையாட்டு பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை.

கோயில் குளம் என்று சென்று வருவார்கள். கிராமப் புறங்களில் போட்டிகள், வீர விளையாட்டுக்கள், கலை நிகழ்ச்சிகள், ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டை, ரேக்ளா ரேஸ் என பல வகையான போட்டிகள் ஒவ்வொரு ஊரிலும் உற்சாகமாக நடைபெறும்.  பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அங்கு விதவிதமான பட்டங்கள் பறக்க விடுவது மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. கடற்கரை, பொது மைதானங்களில், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி போட்டி போட்டு பட்டம் பறக்க விடுகின்றனர். இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் இருள் நீங்கி, ஒளி பிறக்கவும் எங்கும் பச்சையும் பசுமையுமாக இருக்கவும், எல்லாம் வல்ல சூரிய பகவானின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்