கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தேரோட்டம்

2018-01-13@ 12:55:46

கோபி: கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை கோபி டி.எஸ்.பி.செல்வம், முன்னாள் நகராட்சித்தலைவர் நல்லசிவம், கந்தவேல் முருகன், கோயில் நிர்வாகிகள் தங்கம்பழனிச்சாமி, முத்துவேலப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை (14ம் தேதி) கோபியில் தெப்போற்சவமும், 15 மற்றும் 16ம் தேதி கோபியிலும், 17 மற்றும் 18ம் தேதி புதுப்பாளையத்திலும், 19 மற்றும் 20ம்தேதி நஞ்சகவுண்டன்பாளையத்திலும் மஞ்சள் நீர் உற்சவமும், இரவு அம்மன் கோயில் வந்தடைதல் மற்றும் மறுபூஜையும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் நாகராஜ், உதவி ஆணையர் மற்றும் தக்கார் முருகையா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மேலக்காட்டுவிளை கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
குலசேகரன்பட்டினம் சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்
தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55
புதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை
20:48
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்
20:38
கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய கடல் பாம்புகள்
19:49
ஐபிஎல் 2018 : டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு
19:35
செய்தியாளரை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்குப்பதிவு
19:13