SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழா

2018-01-13@ 12:54:44

சீர்காழி: சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடார வல்லி விழா நடைபெற்றது. சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெருமாள் லோகநாயகிதாயாருடன் அருள்பாலிக்கிறார். திருப்பாவையில் 27 வது பாசுரமான கூடாரவல்லி சீர்கோவிந்தா என்ற பாசுரத்திற்காக பெருமாள், தாயார், ஆன்டாள் சுவாமிகள் ஒருசேர காட்சி தரும் கூடாரவள்ளி விழா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கூடாரவல்லி விழா நடந்தது.

முன்னதாக தாடாளன்பெருமாள், உபநாச்சியார், லோகநாயகிதாயார், ஆன்டாள், நித்யஉத்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சன்னதியில் தாடாளன்பெருமாள், லோகநாயகிதாயார், ஆன்டாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்