SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தை மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-01-13@ 10:40:50

தை 1, ஜனவரி 14,  ஞாயிறு.

திரயோதசி  மகர சங்கராந்தி. பொங்கல் பண்டிகை. (பொங்கல் வைக்க நல்ல நேரம் கா.11.00  12.00) பிரதோஷம். திருவையாறு குத்தாலம் தீர்த்தம், சீர்காழி உமாமகேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகு காப்பு, தஞ்சை மாவட்டம் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தல், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி சுவாமிக்கு  தை தேர், தீர்த்தவாரி உத்தராயண வாசல் திறப்பு.

தை 2, ஜனவரி 15, திங்கள்.

சதுர்த்தசி. திருவள்ளுவர் தினம், கனுமாட்டுப் பொங்கல், மாத சிவராத்திரி. கரிநாள். மருதமலை படித் திருவிழா.  மாத சிவராத்திரி. சிங்கிரிகோயில் ஸ்ரீகனகவல்லி தாயார் கனு உற்சவ தீர்த்தவாரி.

தை 3, ஜனவரி 16, செவ்வாய்.

அமாவாசை. உழவர் திருநாள், தை அமாவாசை. கரிநாள். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் வைரக் கிரீடம் சாற்றியருளல். திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்தருளல், இரவு ஸ்ரீஅம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, இரவு ஸ்ரீசெல்வமுத்துகுமர சுவாமிக்கும், ஸ்ரீஆறுமுகருக்கும் ஷண்முகார்ச்சனை, திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் சங்கமுக தீர்த்தவாரி தேவனாம்பட்டிணம் செல்லுதல், ஸ்ரீசிவசைலநாதர் நந்தி களபம், வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம் சேது ஸ்நான
விசேஷம்.

தை 4, ஜனவரி 17, புதன்.

பிரதமை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரஸிம்ம  மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி சுவாமிக்கு கொடுக்குமுடி சேவை.

தை 5, ஜனவரி 18, வியாழன்.

துவிதியை. சந்திர தரிசனம், திருவோண விரதம். ஸ்ரீவாஸவி அக்னிப் பிரவேசம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் உற்சவாரம்பம். திருவஹீந்திரபுரம் ஸ்ரீதேவநாத ஸ்வாமி பெண்ணையாற்று உற்சவம், தீர்த்தவாரி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி.

தை 6, ஜனவரி 19, வெள்ளி.


திருதியை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவேதவல்லித்  தாயாருக்குத் திருமஞ்சன சேவை. வேளூர் ஸ்ரீகற்பக விநாயகர் உற்சவ ஆரம்பம், திருவள்ளுவர் ஸ்ரீவீரராகவர் திருத்தேர் குதிரை வாகனம்.

தை 7, ஜனவரி 20, சனி.

சதுர்த்தி. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். அப்பூதியடிகள் நாயனார் குருபூஜை.

தை 8, ஜனவரி 21, ஞாயிறு.

பஞ்சமி. சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் ஸ்வாமி பூத வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.

தை 9, ஜனவரி 22, திங்கள்.

சஷ்டி. வஸந்த பஞ்சமி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.

தை 10, ஜனவரி 23, செவ்வாய்.

சப்தமி. சஷ்டி விரதம். காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருவீயுலா. கலிக்கம்ப நாயனார் குருபூஜை. நமச்சிவாய தேசிகர் (அடியவர்) குரு பூஜை. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கலசப்பாக்கம் தீர்த்தவாரி, நாகர்கோவில், நாகராஜர் கோயிலில் கொடியேற்றம். கரும்பூர் கரிய மாணிக்க பெருமாள் திருஅவதார உற்சவம்.

தை 11, ஜனவரி 24, புதன்.

அஷ்டமி. ரத ஸப்தமி, பீஷ்மாஷ்டமி. கரிநாள். நமச்சிவாய மூர்த்தி நாயனார் குருபூஜை. தஞ்சை மாவட்டம்  செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கந்தர்வர் பெண் சந்திரரேகைக்கு காவேரியில் காட்சி கொடுத்து அருளல். திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ ஆதி நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை, இரவு பட்டினப்பிரவேசம்.

தை 12, ஜனவரி 25, வியாழன்.

நவமி. வாஸ்து நாள். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமயத்தை ஸ்தாபித்த வரலாற்று லீலை. பழனிஆண்டவர் உற்சவாரம்பம்.

தை 13, ஜனவரி 26, வெள்ளி.

தசமி. குடியரசு தினம், தை கிருத்திகை. கார்த்திகை விரதம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் வெள்ளி கருட சேவை. சென்னை ஓட்டேரி ஸ்ரீசுந்தர விநாயகர் வருஷாபிஷேகம்.

தை 14, ஜனவரி 27, சனி.

பீம ஏகாதசி. மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வராள் தந்தப் பல்லக்கு, மாலை தங்கக் குதிரையில் பவனி.  

தை 15, ஜனவரி 28, ஞாயிறு.

வைஷ்ணவ ஏகாதசி. துவாதசி. வராஹத் துவாதசி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருக்கல்யாணம். கண்ணப்ப நாயனார் குருபூஜை. பெரிய நகசு. வேளூர் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி உற்சவ ஆரம்பம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் சிவகங்கை தெப்பம்.

தை 16, ஜனவரி 29, திங்கள்.
 
திரயோதசி.  பிரதோஷம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு. திருச்சேறை சாரநாதர் சூர்ணோற்ஸவம். அரிவாட்ட நாயனார் குருபூைஜ.

தை 17, ஜனவரி 30, செவ்வாய்.

சதுர்த்தசி. கரிநாள். கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.சர்வோதயா நாள். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் ஒட்டிவாக்கம் திருவூரல் உற்சவம்.

தை 18, ஜனவரி 31, புதன்.

பெளர்ணமி. தைப்பூசம், சந்திர கிரஹணம், பெளர்ணமி விரதம்.  வடலூர் ராமலிங்க சுவாமி. அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.  பழநி திருத்தேர், திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி  வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் காவேரியில் தீர்த்தம் கொடுத்து அருளல், இரவு வெள்ளி ரத காட்சி. வேளூர் ஸ்ரீபஞ்சமூர்த்தி புறப்பாடு,  சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் கோயில் இந்திர தீர்த்தம் தெப்பம், சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் பால்குடம் அபிஷேகம், நகர்வலம், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் அனந்தசரஸ் தெப்பம், திருவஹீந்திரபுரம் ஸ்ரீதேவநாத ஸ்வாமி தைப்பூச உற்சவம், சேக்ஷவாஹண புறப்பாடு, சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் எழுந்தருளி தீர்த்தவாரி.

தை 19, பிப்ரவரி 1, வியாழன்.

பிரதமை. கோவை பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலவர் இத்தலங்களில் தெப்போற்ஸவத் திருவிழா.

தை 20, பிப்ரவரி 2, வெள்ளி.

துவிதியை. திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம். கோவை பாலதண்டாயுதபாணி மஹா தரிசனம். பழனி ஆண்டவர் பெரிய தங்கமயில் வாகனத்தில் திருவீதிவுலா. ஸ்ரீரங்கம் ஆளும்பல்லக்கு. எண்கண் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தல்.

தை 21, பிப்ரவரி 3, சனி.

சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி. பழனி ஸ்ரீஆண்டவர் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத்தேர் விழா.

தை 22, பிப்ரவரி 4, ஞாயிறு.

பஞ்சமி. திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டாதினம். சண்டேஸ்வர நாயனார் குருபூஜை. வீரமாமுனிவர் நினைவு நாள்.

தை 23, பிப்ரவரி 5, திங்கள்.

சஷ்டி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.  ஸத்குரு ஸ்ரீஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி. கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்.

தை 24, பிப்ரவரி 6, செவ்வாய்.

சப்தமி. ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் பிரம்மமோற்ஸவாரம்பம். ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்ஸவாரம்பம்.

தை 25, பிப்ரவரி 7, புதன்.

அஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் கற்பக விருஷப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

தை 26, பிப்ரவரி 8, வியாழன்.

நவமி. காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்ஸவாரம்பம். திருச்சி மௌனகுரு ஸ்ரீதாயுமான சுவாமிகள் மஹா குருபூஜை. திருநீலகண்டநாயனார் குருபூஜை.

தை 27, பிப்ரவரி 9, வெள்ளி.

தசமி. ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி. திருக்கோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு. தையாறு ஸ்ரீவீரஆவேஸ ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதிஉலா புறப்பாடு, சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மன் 44ம் ஆண்டு மஹாபிஷேகம். அன்வஷ்டகா.

தை 28, பிப்ரவரி 10, சனி.

ஏகாதசி. காளஹஸ்தி சிவபெருமான் பவனி. ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

தை 29, பிப்ரவரி 11, ஞாயிறு.

துவாதசி. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை. திருவைகாவூர் சிவபெருமான் புறப்பாடு. திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி சம்வத்ஸ்ராபிஷேகம்.

தை 30, பிப்ரவரி 12, திங்கள்

திரயோதசி. காளஹஸ்தி சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதிவுலா. ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. சேங்காலிபுரம் முத்தண்ணாவாள் ஆராதனை.

தொகுப்பு: ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்