SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனித உருவில் தோன்றும் கடவுள்!

2018-01-13@ 09:53:59

இந்த உலகத்தில் உண்மையான அன்பு கிடைக்காது. மனிதரின் அன்பு மாறிப்போகும். இன்றைக்கு ஒன்று சொல்வார்கள், நாளைக்கு ஒன்று சொல்வார்கள். நன்றாக இருக்கும்போது நேசிப்பார்கள். ஆபத்து, கஷ்டம் வரும்போது மறந்துபோவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் உயர்வு வரும்போது மறந்துபோவார்கள். ஆகவேதான் எல்லாம் வல்ல இறைவன் ‘‘நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்  என்று அவரது பரிபூரண அன்பைத் தருகிறார். அடிக்கடி இறைவனைக் குறித்த எண்ணம் உடையவர்களாக மனித நேயர்களுடன் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் போதனை வழியைப் பின்பற்றி வாழ நினைத்த அந்த மனிதர் ஊர் ஊராக அலைந்தார். அவருடைய சொத்து என்பது வெறும் ஒரு துணிப்பை மட்டுமே. அவ்வாறு அலைந்து திரிந்தபோது ஒருநாள் அவர் நோய்வாய்ப்பட்டார். காய்ச்சலும், வேறு நோய்களும் வந்ததால் அவர் ஓர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை எவரும் கவனிக்கவில்லை. பிச்சைக்காரன் என்று நினைத்தனர். மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரிடம் வந்து, நீ போய் அந்த வராந்தாவில் உட்கார். இப்போது உனக்குக் கொடுக்க படுக்கை எதுவும் இல்லை என்றார். அவர் போய் வராந்தாவில் உட்கார்ந்தார். அங்கு அவர் ஓர் ஆங்கில நாளேட்டைக் கண்டதும் அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அதைக்கண்ட அந்த ஊழியர் அவரிடம், உனக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியுமா? என்று கேட்டார். அவர் தெரியும் என்றார். அவரிடம் ஊழியர், நீ எதுவரை படித்திருக்கிறாய்? என்று கேட்க, அவர் நான் ஆங்கிலத்தில் M.A. பட்டம் எடுத்தவன் என்றார். அவர் தங்களுடைய பெயர் என்னவென்று கேட்க, என் பெயர் பீட்டர் ராயன் என்றார். அதிர்ந்துபோன அந்த ஊழியர் உடனே அவருக்கு படுக்கை மற்றும் மருந்துகள் கொடுத்தார்.

அவர் ஊழியரிடம், நான் M.A. படித்தவன் என்று சொன்னதால் இவை அனைத்தும் தந்தீர்கள். ஆனால் ``MAN” என்று வந்தபோது எதுவும் செய்யவில்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னார். நாம் அதிகமாக மதிக்க வேண்டியது கல்லூரி பட்டத்தை அல்ல. மனிதத்தன்மையைத்தான். கடவுள் மனித உருவில்தான் தோன்றுகிறார். ‘‘நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர் மீதும், வாழ்வோர் மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். அப்படியிருக்க நீங்கள் ஏன் உங்கள் சகோதரர், சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்?

நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கைமுன் நிறுத்தப்படுவோம் அல்லவா? ஏனெனில், ‘‘ஆண்டவர் சொல்கிறார், நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன், முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும். நா அனைத்தும் என்னைப் போற்றும்’’ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ? ஆகவே, நம்முன் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர். ஆகையால் இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதர, சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ, இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல. எனினும் ஒரு பொருள் தீட்டானது எனக்கருதுவோருக்கு அது தீட்டானதாகவே இருக்கும்.’’  (உரோமையர் 14:714)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்