SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 54

2018-01-12@ 12:54:38

‘பம்பாஸந்தி’ விருந்து...

வளமிக்க வனமிக்கது சபரிமலை. இயற்கை எழில் கொஞ்சும் இம்மலையின் தென்கிழக்குப்பகுதியிலிருந்து சபரிமலையின் தொடர்ந்த நீலிமலையின் அடிவாரத்தின் வழியாக பம்பா என்ற பம்பை நதி செல்கிறது. ராமாயண காலத்து நதியாகும். ‘பம்பை’ என்றாலே ‘பாவங்களைப் போக்கி காப்பாற்றுவது’ பொருள் தருகிறது. சபரிமலையில் இருக்கிற பம்பை நதிக்கு பல்வேறு ஆன்மிக, வரலாற்றுப் பெருமை இருக்கிறது. ஐயப்பன் அவதரித்த மேன்மைக்குரிய இந்நதிக்கு ‘தட்சிண கங்கை’ என்றொரு பெயருண்டு. பரசுராமர், பரமசிவனை வேண்டி தவம் செய்து அதன் பயனாக எல்லா புண்ணிய தீர்த்தங்களும் ஒன்று சேர்ந்தே பம்பா என்ற இந்த பம்பை நதி உருவானதென புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஐயப்ப பக்தர்கள் ஓரிரவு இந்த நதிக்கரையிலேய தங்கிச் செல்கின்றனர். இந்நாளில் ஒவ்வொரு பக்தரும் இருமுடியின் ஒருமுடியில் தான் கொண்டு வந்த, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை எடுத்து உணவு சமைக்கின்றனர். இவ்விருந்துணவை ‘பம்பாஸந்தி’ என்கின்றனர். இந்த விருந்து தயாரிப்பையும், உண்பதையும் ஒரு சம்பிரதாயமாகவே நிறைவேற்றுகின்றனர். தாங்கள் மட்டுமல்லாது, தங்களுடன் வரும் அறிமுகமற்ற மற்றவர்களுக்கும் இந்த விருந்து பரிமாறுதல் நடக்கிறது. இத்தருணத்தில் விருந்து சமைக்க மூட்டும் அடுப்புச் சாம்பலை ஒரு ‘பிரசாதமாகவே’ பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர். கன்னிசாமிகள், முன்னாட்களில் 108 அடுப்புகளில் இப்படி சாம்பல் சேகரிப்பது சம்பிரதாயமாக இருந்தது. இப்போது இந்நிகழ்வு குறைந்து, சில அடுப்புகளில் மட்டுமே சாம்பல் சேகரிப்பதும், இச்சாம்பலை ஒரு பிரசாதமாக வீடு கொண்டு சேர்ப்பதும் இருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்