SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரெங்கும் பரிதி வழிபாடு

2018-01-12@ 09:56:03

பாகிஸ்தானில் செனாப் நதிக்கரையில் மூலஸ்தானம் எனும் சூரியத்தலம் உள்ளது. இத்தலத்தில் முன்பு தங்கத்தினாலான சூரிய பகவானின் விக்ரகம் இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்காவின் பெருநாட்டில், இன்கா என்ற பழங்குடியினர், தாங்கள் சூரியனிலிருந்து வந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

மத்திய அமெரிக்காவில் பதினைந்து நூற்றாண்டுகள் செழித்து விளங்கிய மாயன் இன மக்களின் முதற்கடவுளே சூரியன்தான். ‘கினீஸ் அஹௌ’ என்று சூரியக் கடவுளை அவர்கள் வழிபடுகிறார்கள்.

ஜப்பானிலும் சீனாவிலும் சூரியன், பெண் கடவுளாக வணங்கப்படுகிறார். ஜப்பான் நாட்டின் ஷிண்டோ மதத்தினருக்கு சூரிய வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களது கொடியே சூரியக்கொடிதான்.

பாரசீகர்களின் பார்ஸி மதத்தின் புனித வேதமான ‘அவெஸ்தி’யில் சூரிய வழிபாடு பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளன.

கிரேக்க புராணத்தில் சூரியனுக்கு ஹீலியஸ் என்றும் அப்பலோ என்றும் பெயர்கள்.

பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான சுமேரிய, அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நாகரிகங்களின் முக்கிய வழிபாட்டுக் கடவுள் சூரியன்தான். அவரை ஷாமெஷ் என்றழைத்து வணங்கி வந்துள்ளனர்.

எகிப்தில் புகழ் பெற்று விளங்கியவர் சூரியக்கடவுள்தான். ‘அமான்’ என்றும்  ‘கிராஸ்’ என்றும் அவர் வணங்கப்படுகிறார். இங்கே  பிரமிடுகளில் சூரிய
வழிபாடு நடத்தப்படுகிறது. அந்நாட்டுக்காரர்கள் சூரியனை புத்தி, ஆரோக்கியத்தை வளர்க்கும் கடவுளாக வழிபடுகின்றனர்.

பெரு, மெக்சிகோ நாட்டுக்காரர்கள் சூரியனை வீரம் தரும் கடவுளாக வழிபடுகின்றனர்.

கொரியாவில் ச்சூ சோக் எனும் பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ச்சூ சோக் எனில், ‘நல்ல அறுவடைக்கு நன்றி’ என்று அர்த்தம். இவ்விழாவை தங்கள் முன்னோர்க்கு அர்ப்பணித்து வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வியட்னாமில் பொங்கல் அறுவடைத் திருநாள் ‘டட் ட்ர்ங் தூ’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் ‘யாம்’ எனும் பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரட்டையராகப் பிறந்தவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்