நல்ல பெயர் சூட்டுங்கள்

2018-01-11@ 14:28:00

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் உங்கள் பெயராலும் உங்கள் தந்தையின் பெயராலும் தான் அழைக்கப்படுவீர்கள். (ஆகவே குழந்தைக்கு வைக்கும்) பெயர்கள் நல்லதாக இருக்கட்டும்.” (அபூதாவூது) மோசமான பெயர்களை நபிகளார்(ஸல்) மாற்றியிருக்கிறார்கள்; மாற்றும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்கள். உமர் பாரூக் அவர்களின் மகளின் பெயர் ‘அகங்காரி’ எனும் பொருள் தரக்கூடிய ஆஸ்வியா என்று இருந்தது. அதை நபியவர்கள்(ஸல்) ‘அழகி’ என்று பொருள்தரும் ‘ஜமீலா’ என்று மாற்றினார்கள். (திர்மிதி) அதேபோல் இறைவனின் திருப்பெயர்களைக் குழந்தைக்குச் சூட்டுவதையும் நபிகளார் தடுத்தார்கள். அதே சமயம் அல்லாஹ்வின் அடிமை என்னும் பொருள்பட உள்ள பெயர்களான அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் போன்ற பெயர்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்) எல்லாவகையிலும் நல்ல பெயரைச் சூட்டவேண்டும். அது குழந்தையின் உரிமையாகும். குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது இந்த உண்மையைப் பெற்றோர் மறந்துவிடக் கூடாது.
குழந்தை பிறந்த ஏழாம் நாள் குழந்தையின் முடி களையப்பட வேண்டும் என்றும், அகீகா(குர்பானி) கொடுக்கவேண்டும் என்றும், பெயர் வைக்கப்பட வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. ஆனால் அபூஅஸ்யதின் மகனுக்கு நபியவர்கள்(ஸல்) முன்திர் என்று பெயர் வைத்தது குழந்தை பிறந்த அன்றைக்கே தான். குழந்தையின் பெயர்களை எப்போதும் தந்தையின் பெயர்களுடன் சேர்த்தே அழைக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. (குர்ஆன் 33:5) பரிகாசப் பெயர்களையோ பட்டப் பெயர்களையோ சூட்டக் கூடாது என்றும் குர்ஆன் தடுத்துள்ளது. (குர்ஆன் 49:11) பிறக்கும் குழந்தை முதன் முதலில் கேட்க வேண்டிய சத்தம் அந்தக் குழந்தையைப் படைத்த இறைவனின் மகத்துவத்தைப் பறைசாற்றும் வார்த்தைகளைத்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. எதிர்காலத்தில் அந்தக் குழந்தை ஏற்றுச் செயல்படுத்த வேண்டிய முன்னோடிக் கொள்கை முழக்கமாகவும் அந்த வார்த்தைகள் இருக்க வேண்டும்.
ஆகவே குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள்(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.
அலீ(ரலி)அவர்களுக்கு ஹஸன் பிறந்தபோது நபியவர்கள் குழந்தையின் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் நபியவர்கள்(ஸல்) சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். அதேபோல் குழந்தை பிறந்ததும் அதன் நாவில் பேரீச்சம்பழ நீர் அல்லது தேன் தடவுவதும் நபிவழியாகும். அபூமூஸா(ரலி)அவர்கள் தம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அந்தக் குழந்தைக்கு ‘இப்ராஹீம்’ என்று பெயர் சூட்டினார். பேரீச்சம்பழ நீரை நாவில் தடவி விட்டதுடன் குழந்தையின் அருள்வளத்துக்காகப் பிரார்த்தனையும் செய்தார்(முதஃபகுன் அலைஹி) அபூதல்ஹாவுக்கும் உம்மு ஸுலைமுக்கும் குழந்தை பிறந்தபோது குழந்தையை அண்ணலாரிடம் கொண்டு சென்றார்கள். அப்போது நபியவர்கள்(ஸல்) பேரீச்சம்பழத்தைச் சுவைத்து அதன் சாற்றைக் குழந்தையின் நாவில் தடவிவிட்டார்கள். பிறந்தவுடன் குழந்தைக்கு இனிப்பு தடவுவது விரும்பத்தக்கதாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாள் குழந்தையின் முடியைக் களைவதும் அந்த முடியின் எடைக்குச் சமமான வெள்ளியைத் தானமாக வழங்குவதும் அகீகா கொடுப்பதும் நபிவழி அடிப்படையிலான புண்ணிய செயல்களாகும்.
இந்த வார சிந்தனை
“குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்ல.” நபிமொழி
சிராஜுல்ஹஸன்
மேலும் செய்திகள்
ஒரு கல் ஆயுள் மறு கல் ஆசை
பொம்மிடி அருகே புனித லூர்து அன்னை தேவாலயத்தில் கெபி திருவிழா
காரைக்கால் புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவில் 5 தேர் பவனி
முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்!
வேண்டாம் முகஸ்துதி!
திண்டுக்கல் மேட்டுபட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் பாஸ்கு திருவிழா
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்
LatestNews
கோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து
01:07
நெல்லை சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு
01:01
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு
00:45
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு
21:40
ரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு
20:47
சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
20:11