SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

2018-01-11@ 14:05:04

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சதுர்கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அம்மாச்சத்திரத்தில் சப்தரிஷீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை பக்தர்கள் காலபைரவர் கோயில் என்று அழைக்கின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும் காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் வந்துள்ளது. இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை மாலை 5 மணிக்கு சிறப்பு பைரவ ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்